For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுப்பேன்: சேலம் ஆட்சியர் ரோகிணி - வீடியோ

By Suganthi
Google Oneindia Tamil News

சேலம்: பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளைத் தடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்று சேலம் மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியாளராக பொறுப்பேற்றுள்ள ரோகிணி ராம்தாஸ் பாஜிபாக்கரே கூறியுள்ளார்.

கடந்த திங்கள்கிழமை சேலம் மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியாளராக ரோகிணி ராம்தாஸ் பாஜிபாக்கரே பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது பேசிய அவர், ''மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வழிவகை செய்வேன்.

Salem district new collector Rohini listed her duties

அதுமட்டுமுல்லாமல் ஒரு பெண் ஆட்சியாளராக பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை தடுக்க காவல்துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுப்பேன். பெண்கள் பொருளாதார ரீதியாக மேம்பாடு அடைவதற்கான பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்.

சேலம் மாவட்டத்தை சுகாதாரம், கல்வி அறிவு, வேலைவாய்ப்பு என பொதுமக்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு அனைத்திலும் முன்மாதிரி மாவட்டமாகத் திகழ தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்'' என கூறினார்.

English summary
Salem district new collector Rohini told that she will take action against atrocity against women.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X