For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

8 வழிச்சாலை: நில உரிமையாளர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றக் கூடாது - சென்னை ஹைகோர்ட் அதிரடி

சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இருந்து அதன் உரிமையாளர்களை மறு உத்தரவு வரும் வரை அப்புறப்படுத்த கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    நில உரிமையாளர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றக் கூடாது - ஹைகோர்ட் அதிரடி- வீடியோ

    சென்னை: சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இருந்து அதன் உரிமையாளர்களை மறு உத்தரவு வரும் வரை அப்புறப்படுத்த கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    சென்னை- சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு நிலங்களை கையகப்படுத்தி வந்தது. இதில் விவசாய நிலங்கள், பாரம்பரியமாக கட்டப்பட்ட வீடுகள் என கையகப்படுத்தப்பட்டன.

    இதற்காக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    சுமார் 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான மத்திய அரசின் திட்டத்தை வரவேற்ற தமிழக அரசு, விவசாயிகளின் நிலங்கள் மற்றும் வீடுகளை அளந்து கல் நட்டுவிட்டது. இந்த திட்டத்தால் 7000 ஏக்கர் நிலங்களும் 13,000 மரங்களும் இழக்க நேரிடும்.

    விவசாயிகள் வழக்கு

    விவசாயிகள் வழக்கு

    விவசாய நிலங்களை கொடுத்து விட்டு வாழ்வாதாரத்தக்கு நாங்கள் என்ன செய்வது என்று கேட்டனர். இதற்கு தமிழக அரசு மசிய வில்லை. இதையடுத்து விவசாயிகள் தொடர்ந்த சென்னை ஹைகோர்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    தவறான விஷயம்

    தவறான விஷயம்

    இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் , பவானி சுப்புராமன் அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள் சேலம் - சென்னை 8 வழி சாலைக்கு நிலம் எடுப்பது குறித்து மக்களுக்கு அரசு அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை, இது தவறான விஷயம் என்று நீதிபதிகள் கண்டித்தனர்.

    என்ன தீர்ப்பு

    என்ன தீர்ப்பு

    இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அதன்படி சேலம் - சென்னை எட்டு வழிச் சாலைக்கு நிலம் எடுப்பதை காரணம் காட்டி நில உரிமையாளர்களை கட்டாயப்படுத்தி அகற்ற கூடாது.நிலத்தில் அதன் உரிமையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்றுள்ளனர்.

    முதலில் வந்த தகவல்

    முதலில் வந்த தகவல்

    இந்த வழக்கு செப்டம்பர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. முதலில் நிலம் எடுக்க ஹைகோர்ட் தடை விதித்ததாக தவறான தகவல் பரவியது. இந்த நிலையில் தற்போது நிலம் எடுக்க தடை கிடையாது, அதே சமயம் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்குள் அதன் உரிமையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. மறுஉத்தரவு வரும் வரை இதை பின்பற்ற வேண்டும் என்றுள்ளனர்.

    English summary
    Chennai HC bans for land acquisition for 8 lane project after hearing the farmer's plea.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X