For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சேலம் சாலை: நிலம் கையகப்படுத்துவது பற்றி மக்களிடம் அறிவிக்காதது ஏன்.. சென்னை ஹைகோர்ட் விளாசல்!

சேலம் - சென்னை 8 வழி சாலைக்கு நிலம் எடுப்பது குறித்து மக்களுக்கு அரசு அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை, இது தவறான விஷயம் என்று சென்னை ஹைகோர்ட் கண்டித்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

கோவை: சேலம் - சென்னை 8 வழி சாலைக்கு நிலம் எடுப்பது குறித்து மக்களுக்கு அரசு அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை, இது தவறான விஷயம் என்று சென்னை ஹைகோர்ட் கண்டித்துள்ளது.

சேலம் - சென்னை 8 வழி சாலை அமைக்கப்பட வேலைகள் நடந்து வந்தது. இந்த சாலை போடப்படும் என்று அறிவிப்பு வெளியானதில் இருந்தே மக்கள் இதற்கு எதிராக போராடி வருகிறார்கள்.

Salem greenway: TN Gov didnt give proper notice to people on land acquisition

இந்த சாலைக்கு எதிராக போராடும் மக்கள், போராளிகள், அரசியல் வாதிகள் என்று எல்லோரும் கைது செய்யப்பட்டார்கள். இந்த நிலையில்தான் இதற்கு எதிராக பூவுலகின் நண்பர்கள், தருமபுரி எம்.பி. அன்புமணி ராமதாஸ், பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் சார்பாக தொடரப்பட்ட வழக்கில் இன்று விசாரணை நடந்தது.

அதில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அதன்படி சேலம் - சென்னை எட்டு வழிச் சாலைக்கு நிலம் எடுப்பதை காரணம் காட்டி நில உரிமையாளர்களை கட்டாயப்படுத்தி அகற்ற கூடாது.

மறுஉத்தரவு வரும் வரை இதை பின்பற்ற வேண்டும் என்றுள்ளனர். இந்த உத்தரவிற்கு மிக முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. இந்த அறிவிப்பை வெளியிடும் முன், நீதிபதிகளை அரசை கடுமையாக கண்டித்தார்கள்.

சேலம் சாலை தொடர்பாக நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட நோட்டீசில் திட்டத்தின் சிறப்புகள் மட்டும் கூறப்பட்டுள்ளது. ஆனால் கையப்படுத்துவதற்கு தொடர்பான குறிப்புகள் இல்லை. இதை அறிந்த நீதிபதிகள், அரசு மக்களுக்கு இந்த தகவலை தெரிவிக்காதது ஏன், இதை தெரிவிக்காமல் நிலத்தை எடுப்பது தவறு என்று கண்டிப்பு காட்டினார்கள்.

இதையடுத்து இதில் அரசு உரிய பதில் அளிக்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளனர். மேலும் மறுஉத்தரவு நிலத்தில் அதன் உரிமையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்றுள்ளனர்.

English summary
Salem greenway road: TN Gov didn't give proper notice to people on land acquisition.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X