For Daily Alerts
Just In
பணி நேரத்தில் பனியன், லுங்கியுடன் தூக்கம்.. 3 போலீசாரை சஸ்பெண்ட் செய்து சேலம் எஸ்.பி அதிரடி
சேலம்: சேலம் சென்னை நெடுஞ்சாலை ரோந்து படையினர் 3 பேர், பணி நேரத்தில்,சாலையோரம் உள்ள பள்ளி பள்ளி வளாகத்தில் அயர்ந்து தூங்கியதும் அவர்களைப் பணியிடை நீக்கம் செய்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் போலீசார்,சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சேசன்சாவடி பகுதியில் இருக்கும் சாரண, சாரணியர் பயிற்சி பள்ளி வளாகத்திற்கு தினசரி மதிய வேளையில், வரும் ரோந்து போலீசார் 3 பேர் தங்கள் சீருடைகளை கழட்டி விட்டு லுங்கி மற்றும் பனியனுடன் படுத்து உறங்குகின்றனர் என்று புகார்கள் வந்தன.
இதனையடுத்து அதை உறுதி செய்து, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, 3 பேரையும் ஆயுதப் படைப்பிரிவுக்கு இடமாறுதல் செய்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.