For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உள்ளாடைக்குள் மறைத்து உண்டியல் பணம் திருட்டு – 6 பெண்கள் கைது

Google Oneindia Tamil News

சேலம்: சேலத்தில் கோவில் உண்டியல் பணத்தை எண்ணியவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் சுய உதவிகுழுவை சேர்ந்த ஆறு பெண்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், மேச்சேரியிலுள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக 20க்கும் மேற்பட்ட உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது.

இதில், பக்தர்கள் ரூபாய் காணிக்கை செலுத்துவது வழக்கம். இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் சார்பில் மூன்று மாதத்துக்கு ஒருமுறை

Salem women arrested for hundi money theft

நேற்று காலை கோவில் வளாகத்தில் உண்டியலை திறந்து பணம் எண்ணும் பணி நடந்தது. இதில், அருகாமையிலுள்ள கல்லூரி மாணவர்கள், சேலம் மகளிர் சுயஉதவி குழுவை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று பணத்தை எண்ணி கொண்டிருந்தனர்.

மதியம் இரண்டு மணியளவில் மகளிர் சுய உதவிகுழுவை சேர்ந்த ஆறு பெண்கள் மட்டும் எழுந்து பணம் எண்ணிக்கொண்டிருந்த இடத்திலிருந்து வெளியேற சென்றுள்ளனர்.

கண்காணிப்புபணிலிருந்த அலுவலர்களுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் கோவில் பெண் ஊழியர்கள், ஆறு பெண்களையும் தனி அறைக்கு அழைத்து சென்று ஆடைகளை சோதனை செய்தனர்.

அப்போது அந்த பெண்கள் தங்கள் உள்ளாடைகளுக்குள் உண்டியல் பணத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கோவில் செயல் அலுவலர் ரமணிகாந்தன் ஆறு பெண்களையும் மேச்சேரி போலீஸில் ஒப்படைத்தார்.

மேச்சேரி போலீஸார் உண்டியல் பணத்தை திருடிய பெண்களை கைது செய்தனர். மேலும், அவர்கள் மறைத்து வைத்திருந்த, ரூபாய் 27 ஆயிரத்து 370 தொகையையும் பறிமுதல் செய்தனர்.

English summary
6 women self-help group members arrested for stealing the money from temple hundi in Salem.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X