For Daily Alerts
Just In
பாலைவனமாகும் ஆறுகள்... கரூரில் மணல் குவாரி முற்றுகை - வீடியோ
கரூர்: தனியார் நிறுவனத்தினர் மணல் அள்ளக் கூடாது என்று உத்தரவிடக் கோரி கரூரில் உள்ள மணல் குவாரியை மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போது ஆறுகளில் உள்ள மணல்கள் மட்டும் அள்ளப்படுவதோடு மண்ணின் வளங்களும் திருடப்படுகின்றன. இதனால் ஆறுகள் வறண்ட நிலையில் காணப்படுகிறது. தண்ணீரை சேமித்து வைக்க முடியாமல் வெறும் பாறைகளாகவே காட்சி அளிக்கிறது.

இந்நிலையில் கரூரில் உள்ள காவிரி ஆற்று பகுதியில் அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் மணல் அள்ளப்படுவதாக புகார் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் அந்த மணல் குவாரியை இன்று அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர்.
அப்போது நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிக மண் அள்ளக் கூடாது என்றும் தனியார் நிறுவனங்களுக்கு மண் அள்ளும் உரிமை வழங்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்தனர்.