For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மணல் கொள்ளையர்களே அலர்ட் ப்ளீஸ்.. ஹைகோர்ட் தீர்ப்பை கேட்டீங்களா?

மணல் திருட்டில் ஈடுபடும் வாகனங்கள் மீண்டும் ஒப்படைக்கப்பட மாட்டாது என ஹைகோர்ட் கிளை தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

மதுரை: மணல் திருட்டில் ஈடுபடும் வாகனங்கள் மீண்டும் ஒப்படைக்கப்பட மாட்டாது என ஹைகோர்ட் கிளை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் மணல் திருட்டை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஆனாலும் மணல் கொள்ளை பல இடங்களில் மாட்டுவண்டிகள் மூலமாகவும் ட்ராக்டர்கள் மற்றும் லாரிகள் மூலம் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், பாண்டியராமன் என்பவர் இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் மணல் திருட்டு குறித்து புதிய உத்தரவை உயர்நீதிமன்ற மதுரை கிளை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

மதுரை கிளை அதிரடி

மதுரை கிளை அதிரடி

அதன்படி மணல் திருட்டில் ஈடுபடுத்தப்பட்டு பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை மீண்டும் ஒப்படைக்கக்கூடாது என அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஸ்ட்ரிக்ட்டாக தெரிவித்துள்ளது.

மாடுகளை மட்டும்தான்

மாடுகளை மட்டும்தான்

அபாரதம் கட்டினாலும் வாகனங்களை ஒப்படைக்கக்கூடாது என்றும் உயர்நீதிமன்ற கிளை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் மாட்டு வண்டியாக இருந்தால் மாடுகளை மட்டும் தான் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஆட்சியர்களுக்கு உத்தரவு

ஆட்சியர்களுக்கு உத்தரவு

மாட்டு வண்டிகளை எதற்காகவும் ஒப்படைக்கக் கூடாது என உள்துறை செயலாளர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிமன்றம் வேதனை

நீதிமன்றம் வேதனை

மணல் திருட்டு மூலம் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டு வருங்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அவல நிலை உருவாகும் என்றும் ஹைகோர்ட் மதுரை கிளை வேதனை தெரிவத்துள்ளது.

English summary
Chennai high court Madurai bench strictly says Sand stealing Vehicles will not be handed back to owners.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X