For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

1400 பழமை வாய்ந்த பெரிச்சிகோவில் சிவாலயத்தில் சனிப்பெயர்ச்சி விழா!

Google Oneindia Tamil News

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் பெரிச்சிகோவில் கிராமத்தில் உள்ள 1400 ஆண்டு பழமை வாய்ந்த சுகந்தவனேஸ்வரர் சிவாலயத்தில் டிசம்பர் 16ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது.

Sani peyarchi festival at Perichikovil temple

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் வட்டம் கண்டரமாணிக்கம் அருகே பெரிச்சசிக்கோவில் எனும் கிரமத்தில் கி.பி. 6ம் நூற்றாண்டில் கட்டப்பெற்ற 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுகந்தவனேசுவரர் சிவாலயம் உள்ளது.

Sani peyarchi festival at Perichikovil temple

இங்கு போகர் சித்தரால் நவபாஷாணத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள இருமுக காசிவயிரவர் சன்னதிக்குப் பின்னால் தமிழகத்திலேயே தனிச்சிறப்பாக வன்னிமரத்தடியில் மேற்கு நொக்கிய

Sani peyarchi festival at Perichikovil temple

வாறு தனிச்சன்னதியில் இருக்கும் ஒற்றைச் சனீசுவரர் ஆலயம் உள்ளது.

இங்கு டிசம்பர் 16ம் தேதி சனிப்பெயர்ச்சியன்று காலை 8.30 மணிக்கு வெள்ளிக்கவசம் சாற்றப்படவுள்ளது. அதன் பிறகு சனிப்பெயர்ச்சிக்காக சிறப்பு ஹோமம் நடைபெறும். பக்தர் கோடி பெருமக்கள் அனைவரும் வந்து ஒற்றைச் சனீஸ்வரரை தரிசித்து அருள் பெற அன்போடு அழைக்கிறார்கள் விழா ஏற்பாட்டாளர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள்.

மேலும் விபரங்களுக்கு +91 95009 48380, +91 94431 28641 ஆகிய எண்களைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Sani peyarchi festival will be held at Perichikovil temple near Kandaramanickam on Dec 16.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X