For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை ஐஐடி விழாவில் தேசிய கீதத்துக்கு பதில் சமஸ்கிருத பாடல் திணிப்பு

சென்னை ஐஐடியில் நடந்த விழாவில் தேசிய கீதத்துக்கு பதில் சம்ஸ்கிருத இறைவணக்கப் பாடல் திணிக்கப்பட்டது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை ஐஐடி விழாவில் தேசிய கீதத்துக்கு பதில் சமஸ்கிருத பாடல்- வீடியோ

    சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் நடந்த விழாவில் தேசிய கீதத்துக்கு பதில் சமஸ்கிருத இறைவணக்கப் பாடல் திணிக்கப்பட்டது.

    சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் தேசிய தொழில்நுட்ப மையத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Sanskrit devotional song played in Chennai IIT function

    இந்த விழாவில் சம்ஸ்கிருத மொழியில் இறைவணக்கம் இசைக்கப்பட்டது. பொதுவாக மத்திய அரசு நிறுவனங்களில் தேசிய கீதம் இசைக்கப்படுவதுதான் மரபு.

    ஆனால் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஐஐடியில் தேசிய கீதத்துக்கு பதிலாக சமஸ்கிருதத்தில் இறை வணக்கம் இசைக்கப்பட்டது. இதற்கு தமிழ் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

    ஏற்கெனவே விமான நிலையங்களில் தமிழில் அறிவிப்பை நீக்குவது, தமிழக பள்ளிகளில் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சிப்பது என்று பல்வேறு சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில் இங்கு சமஸ்கிருதம் திணிக்கப்பட்டுள்ளது ஏதேச்சையாக நடந்ததாக தெரியவில்லை என்று தமிழ் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

    English summary
    Sanskrit devotional song plays in Chennai IIT function instead of National Anthem. Tamil movements condemns for this.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X