For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிர்மலா தேவி விஷயத்தில் ஆளுநர் அவசரப்படுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: சரத்குமார்

By Siva
Google Oneindia Tamil News

Recommended Video

    செக்ஸ் எஜிகேஷன் முக்கியம் ! சரத்குமார் பரபர- வீடியோ

    புதுக்கோட்டை: பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் ஆளுநர் அவசரம் காட்டுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

    கணித பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளை படுக்கைக்கு அழைத்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார்.

    Sarathkumar doubts TN governors impatience in Nirmala Devi case

    இந்நிலையில் இது குறித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

    பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் அவசரம் காட்டுவது ஏன் என்று தெரியவில்லை. தமிழக அரசிடம் கூட கலந்து பேசாமல் அவர் அவசரப்படுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பேராசிரியையின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. அனைத்து வழக்குகளையும் சிபிஐ தான் விசாரிக்க வேண்டும் என்று கூறுவது தவறு.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தான் காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும். கர்நாடக சட்டசபை தேர்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை அமைக்கப்படுமா என்பது சந்தேகம் தான். அதன் பிறகாவது அமைக்கப்படுமா என்பது கேள்விக்குறியே.

    சமத்துவ மக்கள் கட்சி சார்பில் காவிரி பிரச்சனை தொடர்பாக வரும் 25ம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறோம். மாணவர்களுக்கு செக்ஸ் கல்வி தேவை இல்லை என்று நினைப்பது தவறு. செக்ஸ் கல்வியால் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் என்றார்.

    English summary
    SMK chief Sarathkumar said in an interview that the way TN governor is showing impatience in professor Nirmala Devi's case kindles suspicion.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X