For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி பிரச்சனையில் உங்கள் நிலைப்பாடு என்ன? விளக்குங்க ரஜினி... சரத்குமார் 'பொளேர்'

காவிரி பிரச்சனையில் ரஜினியின் நிலைப்பாடு என்ன என்பதை அவர் விளக்க வேண்டும் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    சைக்கிளில் வந்து போராட்டம் நடத்திய நடிகர் சரத்குமார்- வீடியோ

    சென்னை : காவிரி பிரச்சினையில் ரஜினியின் நிலைப்பாடு என்ன என்பதை அவர் விளக்க வேண்டும் என்று சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

    எரிப்பொருள் விலையேற்றம், போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு உள்ளிட்ட காரணங்களுக்காக தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை அதிமுக அரசு உயர்த்தியது. சுமார் 60 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை பேருந்து கட்டண உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    Sarathkumar questions about Rajini's stand in Cauvery issue

    இதை திரும்ப பெற கோரி மக்களும், அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அரசியல் கட்சியினரும் பேருந்து கட்டணத்தை திரும்ப பெற கோரி போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் பேருந்து கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொள்ள அதன் தலைவர் சரத்குமார் சைக்கிளில் பயணம் மேற்கொண்டு போராட்ட மேடைக்கு வந்தார்.

    அப்போது மாநில அரசை கண்டித்து அவர் பேசினார். மேலும் புதிதாக அரசியலுக்கு வரவுள்ள ரஜினியையும் அவர் விட்டு வைக்கவில்லை. ரஜினி குறித்து அவர் கூறுகையில் காவிரி பிரச்சனையில் ரஜினியின் நிலைப்பாடு என்ன என்பதை அவர் விளக்க வேண்டும். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று கூறிவிட்டு அமெரிக்கா சென்றவர் ரஜினி என்று சரத்குமார் அவரை கடுமையாக சாடினார்.

    ரஜினி காட்டும் முத்திரை பாபா முத்திரை அல்ல, ஆட்டுத் தலை. வாக்குக்கு பணம் கொடுக்க யார் வந்தாலும் செருப்பால் அடியுங்கள் என்று ஆவேசமாக பேசினார் சரத்குமார்.

    English summary
    Sarathkumar questions about Rajini's stand in Cauvery issue. He conducts protest in Chennai Chepauk against bus fare hike.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X