For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சசி குடும்பம் ஒதுங்குனாதான் கட்சிக்கு, ஆட்சிக்கு நல்லது… மயிலாப்பூர் நட்ராஜ் தடாலடி!

Google Oneindia Tamil News

சென்னை: பிளவு பட்ட அதிமுகவில் எந்த அணியில் இருப்பது என்று மாறி மாறி பேசிவந்த மயிலாப்பூர் எம்எல்ஏ நட்ராஜ் இறுதியாக ஓபிஎஸ் அணியில் இருப்பதாக அறிவித்தார்.

ஓபிஎஸ் அணியும், சசிகலா அணியும் இணைவது தொடர்பான பேச்சுதான் தமிழகத்தில் அரசியலில் இன்று டாப் நியுஸ். இந்த இணைப்பைபிற்கு தினகரன் வரவேற்றார். ஆனால் ஓபிஎஸ் சசிகலா குடும்பம் வெளியேறினால்தான் இணைப்பே என்று தடாலடியாக பேசினார்.

இதுகுறித்து மயிலாப்பூர் எம்எல்ஏ நட்ராஜ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

சசி கோஷ்டி

சசி கோஷ்டி

தொடக்கத்தில் இருந்தே சசிகலா குடும்பம் இந்த கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதும் எங்களது கோரிக்கை. இந்த 2 கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும்.

சமரசம்

சமரசம்

இந்தக் கோரிக்கைகளில் சில குழப்பங்கள் இருந்ததால் அதனை இன்று ஓபிஎஸ் விளக்கி இருக்கிறார். சசிகலா குடும்பத்துடன் எந்தவிதமான சமரசத்தை செய்து கொள்ளவும் நாங்கள் தயாராக இல்லை. இந்தக் குடும்பம் இல்லாத அதிமுக மட்டுமே இருக்க வேண்டும்.

ராஜினாமா

ராஜினாமா

இந்தக் கட்சியில் இருந்து சசிகலா குடும்பம் ஒதுங்கி இருந்தால்தான் கட்சிக்கும் ஆட்சிக்கும் நல்லது. இல்லை என்றால் கட்சியும் ஆட்சியும் நிலைக்காது. அவர்கள் வெளியேறினால் ஓபிஎஸ் அணி உள்ளே செல்லும். பேச்சுவார்த்தை நடத்தும். அவர்களே முன் வந்து ராஜினாமா செய்ய வேண்டும்

இணைப்பு

இணைப்பு

இரு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும். அதுதான் தொண்டர்களின் விருப்பமாகவும் இருக்கிறது. கட்சி இணைந்து செயல்பட்டால்தான் அதிமுக பலம் பெறும் என்றும் எம்எல்ஏ நட்ராஜ் தெரிவித்தார்.

English summary
Sasikala family should be away from ADMK, said MLA Natraj today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X