For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. தீவிர கண்காணிப்பையும் தாண்டி, வாரத்தில் 3 நாட்கள் சசிகலாவுடன் ரகசியமாக பேசிய நடராஜன் - பகுதி 3

By R Mani
Google Oneindia Tamil News

Recommended Video

    ஜெயலலிதாவை ஏமாற்றி வாரத்தில் 3 நாட்கள் சசிகலா நடராஜன் சந்திப்பு பகுதி 3

    -ஆர். மணி

    சென்னை: மறைந்த, முன்னாள் முதல்லவர் ஜெயலலிதாவின் தோழியாக கடைசி காலம் வரை உடன் இருந்தவர் சசிகலா. ஆனால், சசிகலா கணவர் நடராஜனை ஜெயலலிதா போயஸ் இல்லத்திற்கு உள்ளேயே விடவில்லை.

    சசிகலாவை திருமணம் செய்தும், நடராஜன் தனது மனைவியோடு வாழ்க்கை நடத்த முடியாத சூழல்தான் இருந்தது. ஆனால், இதற்கு காரணம் சசிகலாவின் தியாகம்தான் என்று ஒரு பேட்டியில் தெரிவித்தார் நடராஜன்.

    [Read this: ஜெ. தீவிர கண்காணிப்பையும் தாண்டி, வாரத்தில் 3 நாட்கள் சசிகலாவுடன் ரகசியமாக பேசிய நடராஜன் - பகுதி 3]

    கணவன்-மனைவியாக இணைந்து சில வருட காலமே வாழ்ந்துவிட்டு, வாழ்வின் பெரும்பகுதி பிரிந்திருக்க நேர்வது கொடுமைதானே. ஆனால், சசிகலாவும், நடராஜனும் விரும்பியே எடுத்த முடிவுதான் இது.

    என் மனைவி ஒரு தியாகி

    என் மனைவி ஒரு தியாகி

    அவ்வளவு சுலபமாக நடராசன் பத்திரிகைகளுக்கு பேட்டிகள் கொடுத்தது இல்லை. ஆனால் 2014 மக்களவைத் தேர்தல்களுக்கு முன்பாக, மார்ச் 22, 2014 ல் என்டிடிவி யின் ஸ்ரீநிவாசன் ஜெயினுக்கு ஒரு நீண்ட பேட்டியை கொடுத்தார். அது மக்களவைத் தேர்தலுக்கு கிட்டத்தட்ட ஒரு மாத த்துக்கு முன்ப கொடுக்கப் பட்ட பேட்டி. அதில் ஒரு கட்டத்தில் நடராசன் இப்படி சொல்லுகிறார்; ‘'என் மனைவி சசிகலா ஜெயலலிதாவுக்காக தியாகங்கள் பல செய்திருக்கிறார். இப்போதும் நானும் எனது மனைவியும் தொடர்பில் இருக்கிறோமா என்று கேள்வி கேட்கும் உரிமை யாருக்கும் கிடையாது. இது எங்களுடைய பர்சனல் விவகாரம். ஆனால் ஒன்றை சொல்லுகிறேன். சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்து, தான் நிரபராதி என்பதை நிருபித்த பின், தன்னுடைய குடும்பத்தினரிடம் நான் மீண்டும் வந்து சேர்ந்து விடுவேன். இந்த கட்டத்தில் ஜெயலலிதாவை விட்டு என்னால் வர முடியாது என்று தெளிவாக எங்கள் குடும்பத்தினரிடம் சசிகலா கூறியிருக்கிறார்'' என்று நடராசன் கூறினார்.

    தொடர்பு இருந்ததா இல்லையா

    தொடர்பு இருந்ததா இல்லையா

    இது விவரம் அறிந்தவர்கள் அனைவரும், குறிப்பாக பத்திரிகையாளர்கள் அறிய விரும்பம் செய்தி, சசிகலாவை ஜெயலலிதா 19.12.2011 ல் கட்சியை விட்டு நீக்கி விட்டு, தன்னுடைய போயஸ் தோட்ட வீட்டிலிருந்தும் வெளியேற்றி, பின்னர் 01.04.2012 ல் சசிகலாவை மீண்டும் சேர்த்துக் கொண்ட பிறகு, சசிகலா, தன்னுடைய கணவர் நடராசனுடன் தொடர்பில் இருந்தாரா அல்லது இல்லையா? என்பதுதான் ...''சசிகலா எப்போதும் நடராசனுடன் தொடர்பில் தான் இருந்தார். இது வெளியில் எவருக்கும் தெரியாது. ஆனால் வாரத்தில் மூன்று நாட்களாவது இருவரும் பேசிக் கொள்ளுவார்கள். சசிகலா விடம் இருந்து ஃபோன் வரும் சமயத்தில் நடராசன் தன்னுடைய நண்பர்களுடன் இருந்தார் என்றால், உடனே நடராசன் நண்பர்களை அடுத்த அறைக்கு சென்று விடுமாறு கூறி விடுவார். இதனை நானே பல முறை பார்த்திருக்கிறேன்'' என்று கூறுகிறார் நடராசனுக்கு நெருக்கமான தமிழ் பத்திரிகையாளர் ஒருவர்.

    ஜெ. விடுத்த எச்சரிக்கை

    ஜெ. விடுத்த எச்சரிக்கை

    ஜெயலலிதா வின் 1991 - 1996, 2001 - 2006 மற்றும் 2011 - 2016 ஆட்சி காலங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், நடராசன் ஜெ வின் 2011 - 2016 ம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் தான் அதிகமாக தமிழக போலீசாரால் கைது செய்யப் பட்டார். இதற்கு காரணம், 2011 டிசம்பர் 19 ம் தேதி, சசிகலா உள்ளிட்ட சிலரை முதலமைச்சர் ஜெயலலிதா கட்சியை விட்டு நீக்கினார். சசிகலா உள்ளிட்டோருடன் எந்த தொடர்பும் யாரும் வைத்துக் கொள்ளக் கூடாதென்றும் திரும்ப, திரும்ப பல முறை எச்சரித்தார். ம.நடராசனின் அரசியல் அபிலாஷைகள் ஜெ வுக்கு எப்போதுமே நன்றாகத் தெரியும். இதன் காரணமாக தன்னுடைய முதல் இரண்டு ஆட்சிக் காலங்களில் இல்லாத அளவுக்கு 2011 - 2016 ல் நடராசனை 24 மணி நேரமும் உளவுத்துறையின் பார்வையில் வைத்திருந்தார் என்று கூறுபவர்களும் உண்டு.

    கண்காணித்த ஜெ.

    கண்காணித்த ஜெ.

    ‘'நடராசன் ‘சில, பல காரியங்களை செய்து, சிலவற்றை பெற்றுக் கொள்ளுவதில் ஜெயலலிதாவுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் அரசியல் ரீதியாக தனக்கு எதிராக, வேலைகளை செய்யத் தொடங்கினால் அதனை ஒருபோதும் ஜெ அனுமதிக்கமாட்டார். யாராவது ஒரு கட்சிக் காரர், அவர் எம்எல்ஏ, எம்பி அல்லது அமைச்சர் என்று யாராக இருந்தாலும், அவர்கள் ஒரு திருமணத்தில் நடராசனை பார்த்தால் கூட அவர்கள் அங்கு இருக்க கூடாது. நேருக்கு நேர் பார்க்கும் சூழ்நிலை வந்து விட்டால், ஒரு வணக்கம் கூட நடராசனுக்கு இவர்கள் தெரிவிக்க கூடாது. இதனை மீறினால் அடுத்த சில மணி நேரங்களில் அந்த குறிப்பிட்ட நபர் - எம்எல்ஏ, எம்பி, அமைச்சர் - யாராக இருந்தாலும் அவர்கள் மீது உடனே நடவடிக்கை பாயும்.

    [பகுதி 1, 2, 3, 4]

    English summary
    Sasikala was always in touch with Natarajan. No one knows this from outside. But at least three days of the week they will talk, says sources close to him.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X