For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ.வின் சொத்துக்களுக்காகவே அவரது வீட்டில் சசிகலா கும்பல் குடியிருந்தது.. சுப்ரீம் கோர்ட்

ஜெயலலிதாவின் சொத்துக்களைக் குறி வைத்தே அவரது வீட்டில் சசிகலா கும்பல் குடியிருந்ததாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா வீட்டில் சசிகலா, இளவரசி உள்ளிட்ட மூவரும் அடைக்கலம் புகுந்தது வாழ்வாதாரத்துக்கோ அல்லது ஜெயலலிதா தங்கச் சொன்னதற்காகவோ அல்ல. மாறாக அவரது சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில்தான் அவர்கள் குடியேறியுள்ளனர் என்று உச்சநீதிமன்றம் பரபரப்பாக கூறியுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை அளித்தது. அதில் ஒரு முக்கிய அம்சம், ஜெயலலிதாவின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில்தான் அவரது வீட்டில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குடியிருந்ததாக கூறப்பட்டுள்ளது.

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரது முக்கிய நோக்கமே சொத்துக்கள்தான் என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதுகுறித்து தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜெயலலிதா கொடுத்தது

ஜெயலலிதா கொடுத்தது

ஏ2 (சசிகலா) மற்றும் ஏ4 (சுதாகரன்) ஆகியோர் தங்களுக்கு என்று சுயேச்சையான வருவாய் ஆதாரங்கள் இருப்பதாக கூறினாலும் கூட, அவர்கள் வைத்திருந்த நிறுவனங்கள், நிலங்கள், பணம் உளளிட்ட ஆதாரங்களை வைத்துப் பார்க்கும்போது, அவை அனைத்தும் ஏ1 (ஜெயலலிதா) மூலமாக வந்தது தெரிய வருகிறது.

அனுமதித்த ஜெயலலிதா

அனுமதித்த ஜெயலலிதா

ஏ2, ஏ3 (இளவரசி) மற்றும் ஏ4 ஆகியோர் ஏ1 வீட்டில் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் மனிதாபிமான அடிப்படையிலோ அல்லது ஏ1 அவர்களை தாராளமாக புழங்க அனுமதித்தார் என்பதற்காகவோ அந்த மூன்று பேரும் ஏ1 வீட்டில் தங்கவில்லை.

கிரிமினல் சதித் திட்டம்

கிரிமினல் சதித் திட்டம்

மாறாக, ஏ1க்குச் சொந்தமான சொத்துக்களை கைப்பற்றும் கிரிமினல் சதித் திட்டத்துடன்தான் இந்த மூன்று பேரும் அங்கு தங்கியிருந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

சந்தேகமே இல்லை

சந்தேகமே இல்லை

பல்வேறு ஆதாரங்கள், ஆவணங்கள் மூலம் இவர்களின் நோக்கம் தெள்ளத் தெளிவாக சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகியுள்ளது என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

English summary
SC bench has observed that Sasikala, Ilavarasi and Sudhakaran hatched conspiracy to hold the assets of Jayalalitha by staying in her house.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X