For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆருக்கு... நினைவிடத்திற்கு வராமல் வீட்டிலேயே அஞ்சலி செலுத்திய சசிகலா!

அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவிக்கு வரத் துடித்துக் கொண்டிருக்கும் சசிகலா, அக்கட்சியை நிறுவிய எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தையொட்டி சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தாமல் போயஸ் தோட்ட வீட்டில் போட்டவுக்கு அஞ்ச

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவின் பொதுச் செயலாளராக வர துடித்துக் கொண்டிருக்கும் சசிகலா, அந்தக் கட்சியை நிறுவியவரான எம்.ஜி.ஆர். நினைவு தினமான நேற்று எம்.ஜி.ஆர். சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தவில்லை. மாறாக ஜெயலலிதாவுக்குச் சொந்தமான போயஸ் கார்டன் வீட்டு வளாகத்திலேயே எம்.ஜி.ஆர். படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி கடமையை முடித்துக் கொண்டார்.

அதிமுகவின் நிறுவனர் எம்.ஜி.ஆர் மறைந்த தினம் நேற்று. தற்போது அவரும் இல்லை, அவரது வாரிசாக கட்சியையும் ஆட்சியையும் நடத்தி வந்த ஜெயலலிதாவும் இல்லை. இந்த இரட்டை அதிர்ச்சி காரணமாக சோகத்தில் இருந்து வரும் அதிமுக தொண்டர்கள் நேற்று எம்.ஜி.ஆர். சமாதியில் ஆயிரக்கணக்கில் குவிந்து இரு தலைவர்களுக்கும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

Sasikala fails to turn to MGR samathi

அதேபோல முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளும் எம்.ஜி.ஆர். சமாதியில் அஞ்சலி செலுத்தினர். ஆனால் கட்சியின் தலைமைப் பொறுப்பைக் கைப்பற்ற படிப்படியாக காய் நகர்த்தி வரும் சசிகலா மட்டும் எம்.ஜி.ஆர். சமாதிக்கு வரவில்லை. மாறாக போயஸ் தோட்ட வீட்டு வளாகத்தில் ஒரு எம்.ஜி.ஆர். படத்தை வைத்து மாலை போட்டு மலர் தூவி அந்தப் புகைப்படத்தையும் வெளியிட்டு விட்டு கடமையை முடித்துக் கொண்டார்.

எம்.ஜி.ஆர். உருவாக்கிய அதிமுக மட்டும் வேண்டும். ஆனால் அவருக்கு அஞ்சலி செலுத்த வீட்டை விட்டுக் கூட வர முடியாதா சசிகலாவுக்கு என்று உண்மையான அதிமுக தொண்டர்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.

English summary
Sasikala did not come to MGR samathi to pay tribute to the late leader and ADMK Founder. She paid a floral tribute to the late Chief Minister at the Poes Garden.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X