For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காணொலி காட்சிக்கு கர்நாடக அரசு அனுமதிக்கவிட்டால்.. சசிகலா நேரில் ஆஜராக வேண்டும்... நீதிபதி உத்தரவு

அன்னிய செலாவணி வழக்கில் காணொலி காட்சி மூலம் சசிகலாவை விசாரிக்க கர்நாடக அரசு அனுமதிக்கவில்லை எனில் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: அன்னிய செலாவணி வழக்கில் காணொலி காட்சி மூலம் சசிகலாவை விசாரிக்க கர்நாடக அரசு அனுமதிக்கவில்லை எனில் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்தார்.

ஜெ.ஜெ.டிவிக்கு வெளிநாடுகளில் இருந்து கடந்த 1996-97-ஆம் ஆண்டு ஒளிபரப்பு சாதனங்கள் கொள்முதல் செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுடன் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக சசிகலா, பாஸ்கரன் மற்றும் ஜெ.ஜெ. டிவி ஆகியவற்றின் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.

Sasikala has to appear in person if Karnataka Govt not give consent for video conference

இந்த வழக்கானது சென்னை எழும்பூர் அல்லிக்குளம் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாஸ்கரன் ஆஜரானார். அதைத் தொடர்ந்து அவர் மீது குற்றச்சாட்டு பதிவானது. இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய சசிகலாவிடம் விசாரணை நடத்தி குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டும் என்று நீதிபதி ஜாகீர் உசேன் தெரிவித்தார்.

அப்போது ஆஜரான சசிகலா தரப்பு வழக்குரைஞர், சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளதாலும், அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாலும் அவரை காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்த அனுமதி கோரினார்.

இந்த வழக்கானது இன்று மாலை 4 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலாவிடம் வரும் 2 வாரங்களுக்குள் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அதற்கு பெங்களூரு சிறை நிர்வாகம் ஒப்புதல் தர வேண்டும்.

கர்நாடக உள்துறை செயலாளரும் சான்றிதழ் வழங்கினால்தான் காணொலி மூலம் விசாரணை நடத்தமுடியும். ஒரு வேளை காணொலி காட்சிக்கு கர்நாடகா அரசு அனுமதி அளிக்காவிடில், அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.

English summary
Sasikala can be inquired by video conferencing on FERA case, but if the Karnataka prison management has not given consent then she will be appeared in-person, orders Egmore court Judge.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X