For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நானும் இங்கேயே தங்குவேன்: கூவத்தூரில் எம்.எல்.ஏக்களை சந்தித்த பின் சசிகலா பேட்டி

சென்னையை அடுத்த கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கியுள்ள தமது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தினார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையை அடுத்த கூவத்தூரில் சொகுசு விடுதியில் தங்கியுள்ள தமது ஆதரவு எம்.எல்.ஏக்களை மூன்றாவது முறையாக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா இன்று மாலை சந்தித்து பேசினார். அப்போது தாமும் இங்கேயே தங்கி இருக்க போவதாக அவர் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே கூவத்தூரில் 90 அதிமுக எம்.எல்.ஏக்களை மன்னார்குடி குண்டர்கள் கட்டுப்பாட்டில் சசிகலா சிறை வைத்துள்ளார். கூவத்தூர் ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

sasikala meets his support MLA's at Golden Bay Resorts

இதனால் கடந்த 2 நாட்களாக கூவத்தூருக்கு சென்று அதிருப்தி எம்.எல்.ஏக்களிடம் சசிகலா ஆதரவு திரட்டினார். இன்றும் கூவத்தூருக்கு சசிகலா சென்றார். எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களை சசிகலா சந்தித்தார்.

அப்போது சசிகலா கூறியதாவது: கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏக்கள் அனைவரும் சந்தோசமாகவும் ஒற்றுமையுடனும் குடும்பமாக இருக்கின்றனர். உயிருள்ளவரை அனைவரும் ஒற்றுமையாக இருந்து கட்சியை காப்பாற்ற வேண்டும்.எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு கட்சியை ஒருங்கிணைத்தவர் ஜெயலலிதா. ஒவ்வொரு மக்களின் மனதிலும் இடம்பிடித்தவர் ஜெயலலிதா.

மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் உடனே சென்று தீர்க்க வேண்டும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் அதியமிக்க வகையில் அமைக்கப்படும். சோதனை காலத்தில் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவரானவர் ஜெயலலிதா. நாளை கூவத்தூரில் இருந்து செல்லும் போது அனைவரும் சந்தோஷமாக செல்வோம். இன்று நானும் இங்கேயே தங்கப்போகிறேன் என்றார்.

English summary
AIADMK general secretary Sasikala today meets his support MLA's at Golden Bay Resorts
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X