For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சசிகலாவின் புரட்டாசி விரதம்: நோ அசைவம்... ஒன்லி சைவம்...

புரட்டாசி மாதம் விரதம் இருப்பதால் அசைவ உணவுகளை தவிர்த்து விட்டு சைவம் மட்டுமே சாப்பிடுகிறாராம் சசிகலா.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: உறுப்பு மாற்று ஆபரேசன் செய்துள்ள கணவர் நடராஜனைக் காண பரோலில் சென்னை வந்திருக்கும் சசிகலா, சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சசிகலா அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவார். பெங்களூரு சிறையில் தனி சமையல் ஆள் வைத்து பிரியாணி, சிக்கன் சமைத்து சாப்பிட்டதாக தகவல் வெளியானது.

இப்போது சிறையில் இருந்து பரோலில் வந்துள்ள நிலையில் அசைவம் தவிர்த்து விட்டு சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுகிறாம்.

பரோலில் வந்த சசிகலா

பரோலில் வந்த சசிகலா

பிப்ரவரி 15ஆம் பெங்களூரு சிறைக்கு போன சசிகலா, அக்டோபர் 6ஆம் தேதி பரோலில் சென்னை வந்தார். கணவர் உடல் நிலையை காரணம் காட்டி 5 நாட்கள் பரோல் பெற்றுள்ளார் சசிகலா.

பூ மழை தூவி

பூ மழை தூவி

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கார் மூலம் சென்னை வந்த சசிகலாவிற்கு வழிநெடுக தினகரன் ஏற்பாட்டின் பேரில் பூக்களை தூவி வரவேற்பு கொடுத்தனர். ஜெயலலிதா பெங்களூரு சிறையில் இருந்து ஜாமீனில் வெளி வந்த போது கொடுத்த வரவேற்பை மிஞ்சியது இது. ஏதோ வெளிநாட்டுக்கு டூர் போய்விட்டு வருவது போல ஃபுல் மேக்அப்பில் காரில் வலம் வந்தார் சசிகலா.

ஃபிளக்ஸ் பேனர்கள்

ஃபிளக்ஸ் பேனர்கள்

சென்னையில் சசிகலா வரும் வழியெங்கும் தியாகத்தாயே என்ற பிளக்ஸ் பேனர்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீட்டில்தான் தங்கியிருக்கிறார் சசிகலா. தியாகத்தாயே என்ற பிரம்மாண்ட பேனர் அங்கேயும் வைக்கப்பட்டுள்ளது.

சைவ உணவுதான்

சைவ உணவுதான்

முதல்நாள் இரவில் சசிகலாவுக்கு மிகவும் பிடித்த செட் தோசையும் வடகறியும் சமைக்கப்பட்டிருக்கிறது. கிருஷ்ணபிரியாவே சமைத்து கொடுத்தாராம். தயிர் சாதமும் கொஞ்சம் சாப்பிட்டாராம்.

புரட்டாசி மாத விரதம்

புரட்டாசி மாத விரதம்

புரட்டாசி மாதம் என்பதால் அசைவ உணவுகள் எதுவும் வேண்டாம் என சொல்லியிருந்தாராம் சசிகலா. அதனால், தோசை, தயிர் சாதம் மட்டும் நேற்று இரவு உணவாக எடுத்துக்கொண்டாராம். புரட்டாசி மாதம் என்பதால் சைவ உணவு மட்டுமே சாப்பிடுகிறாராம் சசிகலா.

நடராஜனுடன் மதிய உணவு

நடராஜனுடன் மதிய உணவு

கணவரை கவனித்துக் கொள்வதற்காக பரோல் பெற்றுள்ள சசிகலா காலை 11 மணி முதல் மதியம் 2 மணிவரை மருத்துவமனையில் இருக்கிறார். காலை, இரவு உணவுகளை கிருஷ்ணபிரியா வீட்டில் சாப்பிடும் சசிகலா, மதிய உணவை மருத்துவமனையில் சாப்பிடுகிறாராம்.

இன்னும் இரண்டு தினங்கள்

இன்னும் இரண்டு தினங்கள்

சசிகலா பரோலில் வந்து 3 தினங்களாகிவிட்டது. இன்னும் இரண்டு தினங்கள் மட்டுமே சென்னையில் இருப்பார். பெங்களூரு சிறைக்கு செல்வாரா? அல்லது தீபாவளி பண்டிகை வரை பரோல் நீட்டிக்கப்படுமா? என்று சசிகலா ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பாகும்.

English summary
Sasikala avoids Non vegetarian foods during Purattasi month. Here is the reasons.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X