For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தூத்துக்குடி மக்களை தொட்டால் நடப்பதே வேற.. சசிகலா புஷ்பா எச்சரிக்கை

தூத்துக்குடி மக்களை தொட்டால் நடப்பதே வேறு என்று சசிகலா புஷ்பா மிரட்டல் விடுத்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு-தலைவர்கள் கண்டனம்- வீடியோ

    தூத்துக்குடி: தூத்துக்குடி மக்களை தொட்டால் நடப்பதே வேறு என்று சசிகலா புஷ்பா மிரட்டல் விடுத்துள்ளார்.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தி அப்பாவி பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

    காவல்துறையின் இந்த கொலை வெறித் தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எம்பி சசிகலா புஷ்பாவும் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    லஞ்சம் வாங்கி வீட்டீர்களா?

    லஞ்சம் வாங்கி வீட்டீர்களா?

    சசிகலா புஷ்பா தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை ஏன் மூட முடியவில்லை. லஞ்சம் வாங்கி விட்டீர்களா?

    ஸ்டெர்லைட் இயங்குமா?

    ஸ்டெர்லைட் இயங்குமா?

    12 பேரை கொலை செய்ய யார் அதிகாரம் கொடுத்தது? தூத்துக்குடி தென் மாவட்டம் என நினைக்க வேண்டாம். 100 நாள் போராட்டத்தை தாண்டியும் ஸ்டெர்லைட் ஆலை இயங்குமா?

    சட்டப்போராட்டம் நடத்துவோம்

    சட்டப்போராட்டம் நடத்துவோம்

    தூத்துக்குடியை தொட்டா மக்களை கட்டுப்படுத்த முடியாது. ஆலையை மூடும் வரை சட்டப் போராட்டம் நடத்துவோம். தான் மேயராக இருந்த போது 2013ல் ஸ்டெர்லைட் ஆலையை மூடினேன்.

    அசால்ட்டா 12 பேர் கொலை

    அசால்ட்டா 12 பேர் கொலை

    அசால்ட்டா 12 பேரை கொன்றுபோட்டுள்ளனர். பெண்கள் உட்பட பேர் கொல்லப்பட்டுள்ளனர். 12 பேரை கொல்ல தைரியம் எப்படி வந்தது? 12 பேரை கொல்ல யார் அனுமதித்தது. ஸ்டெர்லைட்டை இனிமேல் தூத்துக்குடியில் நடத்த முடியாது.

    நடப்பதே வேறு

    நடப்பதே வேறு

    துப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதி கொடுத்த கலெக்டர், எஸ்பி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ்- ஈபிஎஸ் உத்தரவு கொடுத்தார்களா? கொன்றுவிட்டு பணம் கொடுத்தால் சரியாகிவிடுமா? தூத்துக்குடி மக்களை தொட்டால் நடப்பதே வேறு என்று சசிகலா புஷ்பா மிரட்டல் விடுத்துள்ளார். இவ்வாறு சசிகலா புஷ்பா ஆவேசமாக பேசினார்.

    English summary
    Sasikala Pushpa condemns Thoothukudi fire. Sasikala pushpa slams govt for Thoothukudi fire.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X