For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. விடம் அடி வாங்கிய சசிகலா புஷ்பா தினகரனை சந்தித்தது ஏன்?

எம்பி பதவியை ராஜினாமா செய்யக்கோரி ஜெயலலிதா தன்னை அடித்தார் என ராஜ்யசபாவில் கதறியவர்தான் இந்த சசிகலா புஷ்பா.

Google Oneindia Tamil News

Recommended Video

    டிடிவி எப்படி சசிகலா புஷ்பாவை சந்திக்கலாம்?- வீடியோ

    சென்னை: எம்பி பதவியை ராஜினாமா செய்யக்கோரி ஜெயலலிதா தன்னை அடித்தார் என ராஜ்யசபாவில் கதறியவர்தான் இந்த சசிகலா புஷ்பா. அவர், ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்ட தினகரனை சந்தித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆர்கே நகரில் வெற்றி பெற்ற டிடிவி தினகரனை இன்று நேரில் சந்தித்து அதிமுக ராஜ்ய சபா எம்பி சசிகலா புஷ்பா வாழ்த்து தெரிவித்தார். அதிமுகவில் பிளவு ஏற்பட்ட பிறகு ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவாக பேசியவர் சசிகலா புஷ்பா. சசிகலா குடும்பத்தை விமர்சித்து வந்தவர்.

    அதிமுகவின் ராஜ்யசபா எம்பியாக இருப்பவர் சசிகலா புஷ்பா. கடந்த ஆண்டு இவர் பல சர்ச்சைகளில் சிக்கினார். தற்போது தினகரன் பக்கம் சாய்ந்துள்ளார்.

    ராஜ்யசபாவில் ஜெ.மீது புகார்

    ராஜ்யசபாவில் ஜெ.மீது புகார்

    அதிமுக எம்பியான சசிகலா புஷ்பா, திமுக தரப்புடன் நெருக்கமாக இருப்பதாக புகார் எழுந்தது. கடந்த ஆண்டு ஜெயலலிதா மீது ராஜ்யசபாவில் மிக தைரியமாக புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

    ஜெயலலிதா அடித்தார்

    ஜெயலலிதா அடித்தார்

    ஜெயலலிதா தன்னை அறைந்தார், தன்னை அடித்தார் என்று ராஜ்யசபாவில் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். எம்பி பதவியை ராஜினாமா செய்யக்கோரி ஜெயலலிதா மிரட்டுகிறார். என்னை அவர் அடித்தார்.

    உயிருக்கு ஆபத்து

    உயிருக்கு ஆபத்து

    ஆனால், எத்தனை மிரட்டல் வந்தாலும் நான் ராஜினாமா செய்ய மாட்டேன். எனது உயிருக்கு ஆபத்து உள்ளதால், எனக்கு பாதுகாப்பு தர வேண்டும்' என்று ராஜ்ய சபாவில் கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி கண்ணீர் விட்டு கதறினார் சசிகலா புஷ்பா.

    சசிகலா குடும்பம் மீது குற்றச்சாட்டு

    சசிகலா குடும்பம் மீது குற்றச்சாட்டு

    இதைக் கேட்டு அதிமுகவினர் பெரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது கூட சசிகலா குடும்பத்தினர் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை கூறினார்.

    மன்னார்குடி கும்பல்தான்

    மன்னார்குடி கும்பல்தான்

    ஜெயலலிதா மரணமடைந்த போது கூட அவரது சாவுக்கு சசிகலா குடும்பம் தான் என அவர் குற்றம்சாட்டினார். மேலும் மன்னார்குடி கும்பல்தான் ஜெயலலிதாவை கொன்றது என்றும் தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்து வந்தார் இந்த சசிகலா புஷ்பா.

    சந்திப்பு எதற்கு

    சந்திப்பு எதற்கு

    டெல்லியில் லாபி இல்லாமல் இருக்கிறார் தினகரன். தற்போது அந்த இடத்திற்கு வாலன்டியாராக சசிகலா புஷ்பா வருவது போல தெரிகிறது. இதற்காகவே அவர் தினகரனை சந்தித்துப் பேசியிருக்கலாம் என்று தெரிகிறது.

    English summary
    ADMK Rajya sabha MP Sasikala pushpa met Dinakaran after winning in the RK Nagar by poll. Sasikala pushpa said in the Rajya sabha that Jayalalitha beaten her nad slapped her to resign her post.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X