For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஷ்ணுபிரியா என்னுடைய 'ஐஏஎஸ் மேட்'.... அதிரடி காட்டும் சசிகலா புஷ்பா...!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தற்கொலை செய்து கொண்ட டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தம்முடன் ஐஏஎஸ் படித்தவர் என்றும் எந்த ஒரு தலைவரையும் யாரும் பின்னாடி இருந்து இயக்கக் கூடாது எனவும் ராஜ்யசபா எம்.பி. சசிகலா தெரிவித்துள்ளார்.

போலி முன்ஜாமீன் மனு தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜராவதற்காக நள்ளிரவு சென்னை வந்தார் சசிகலா புஷ்பா. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சசிகலா புஷ்பா கூறியதாவது:

Sasikala pushpa speaks on DSP VishnuPriya
  • நீதிமன்றத்திற்கு மரியாதை கொடுத்து ஆஜராக குடும்பத்துடன் வந்துள்ளேன்.
  • இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை.
  • நீதிமன்றம் முடித்துவிட்டு செல்லும் வரை எதுவும் சொல்ல முடியாது.
  • டெல்லி நீதிமன்றம் எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறி உள்ளது.
  • தமிழ்நாட்டில் பாதுகாப்பு வழங்குவார்கள் என நினைக்கிறேன்.
  • ஒரு எம்.பி.யாக இருந்தால் 4 ஆண்டுகளுக்கு எந்த கட்சியிலும் நான் சேர முடியாது என்பது சட்டம்.
  • ஆகையால் பிற கட்சியில் சேருவது பற்றி இப்போது பேச வேண்டாம்.
  • எனது நடவடிக்கைகள் என்ன என்பதை போக போக பொறுந்திருந்து பாருங்கள்.
  • ஒருவர் குற்றம்சாட்டினால் மற்றொருவர் மறுப்பது ஜனநாயகத்தின் இயல்பு தான்.
  • பெண்களுக்கு எப்போதுமே பாதுகாப்பும் மரியாதையும் வேண்டும்.
  • பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக ஊடகங்கள் தான் சரியான பணியை செய்து வருகின்றன.
  • ஊடகங்கள் பாதுகாப்பு தருவீர்கள் என்று நம்பி தான் நான் வந்தேன். நீங்கள் சரியாக செயல்பட்டதால்தான் நான் இங்கு நடமாட முடிந்தது. உங்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
  • பெண்களை அசிங்கப்படுத்தாதீர்கள். களங்கப்படுத்தாதீர்கள்.
  • சுவாதியாக இருக்கட்டும் விஷ்ணு பிரியாவாகட்டும் யாரையும் களங்கப்படுத்தாதீர்கள்.
  • தற்கொலை செய்து கொண்ட டி.எஸ்.பி விஷ்ணு பிரியா என்னுடன் ஜ.ஏ.எஸ். தேர்வுக்கு படித்த பெண்.
  • பெண்களை கவுரப்படுத்தி மரியாதையுடன் அரசுப் பணியை செய்ய வழிவிட வேண்டும்.
  • நான் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை.
  • எந்த கட்சியாகவும் இயக்கங்கள், தலைவராகவும் யாராக இருந்தாலும் தானாக இயங்க வேண்டும்.
  • சூரியன் தானாக இயங்குகிறது. பின்னால் ஒருவர் இருந்து இயக்க கூடாது.
  • பின்னால் இருந்து இயக்குபவர் பெயரை கேட்டால் நன்மை இருக்காது. அது கட்சிக்காரர்களுக்கும் சரி என்னை போன்ற பெண்களுக்கும் சரி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு சசிகலா புஷ்பா கூறினார்.

English summary
Rajyasabha MP Sasikala Pushpa said that Medias are doing right path in women security issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X