For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெளிவரும் சசிகலா.. அடுத்த 6 ஆண்டு மீண்டும் வனவாசம்.. கழகத்தில் ஏற்படுமா கலகம்.. நடக்கப் போவது என்ன?

Google Oneindia Tamil News

- ஆர்.மணி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி சசிகலா வரும் 27ம் தேதி பெங்களூர் ப ரப்பனஹாரா சிறையிலிருந்து விடுதலையாக இருக்கிறார். 2017ம் ஆண்டு பிப்ரவரி 15 ம் தேதி அவரது அண்ணி இளவரசி மற்றும் அக்காள் மகனும், ஜெயல லிதாவின் கைவிடப்பட்ட வளர்ப்பு மகனுமான சுதாகரன் ஆகியோருடன் சேர்ந்து சிறையில் அடைக்கப் பட்டார் சசிகலா. 1991 - 96 ம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் முதலமைச்சர் ஜெய ல லிதா வ ருமானத்துக்கு அதிகமானதாக சொத்து சேர்க்கப் பட்ட வழக்கில் ஜெயலலிதா வுடன் சேர்ந்து இந்த நால்வருக்கும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் செப்டம்பர் 27, 2014 ல் நான்காண்டு சிறைத்தண்டனையும், ஜெய ல லிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதமும், மற்ற மூவருக்கும் தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது. பின்னர் மே 11, 2015 ல் கர்நாடக உயர்நீதி மன்றம் நால்வரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்தது. ஆனால் உ ச்ச நீதிமன்றம் 2017 பிப்ரவரி 14 ல், வழக்கில் மூவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து அவர்களை சிறையில் அடைத்தது. ஜெயலலிதா இறந்து போய் விட்டதால் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ரத்தாகிப் போயின.

Recommended Video

    ஜன. 27.. விடுதலையாகிறார் சசிகலா ! பரபரப்பில் அரசியல் களம்

    சசிகலா சிறைக்குப் போவதற்கு முன்பு சென்னையை அடுத்த கூவத்தூரில் அடைத்து வைக்கப் பட்டிருந்த அஇஅதிமுக எம்எல்ஏ க்கள் கூட்டத்தில் பேசி, எடப்பாடி பழனிசாமியை முதலைமச்சராக அறிவித்தார். அவரும் பின்னர் பதவியேற்றுக் கொண்டார். தர்மயுத்தம் தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம் 2017 ஆகஸ்டில் மீண்டும் எடப்பாடி அமைச்சரவையில் இணைந்து துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

    Sasikala release and its impact on Tamil Nadu politics

    நான்காண்டுகள் ஓடி விட்டன. சட்டமன்ற தேர்தல்கள் இன்னும் மூன்று மாத காலத்தில் நடக்கவிருக்கின்றன. இந்த சூழ்நிலையில் 27 ம் தேதி சிறையிலிருந்து விடுதலையாகி வரும் சசிகலா மீண்டும் அஇஅதிமுக வை கைப்பற்றுவாரா, ஜெ உயிருடன் இருந்த போது தனக்கிருந்த செல்வாக்கை மீண்டும் ஆளும் அஇஅதிமுக விலும், ஆட்சியிலும் பெறுவாரா என்பதுதான் தற்போது அனைவரது மனதிலும் எழுந்திருக்கும் கேள்வியாகும். சசிகலா வை பொறுத்த வரையிலும் அவர் அடுத்த ஆறாண்டுகளுக்கு தேர்தலில் போட்டி போட முடியாது. ஊழல் வழக்கிலோ வேறெந்த வழக்கிலோ 2 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெற்றவர்கள், தண்டனை காலம் முடிந்து வெளியில் வந்தவுடன் ஆறாண்டு காலம் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது சட்டத்தின் நிலைப்பாடு. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி சசிகலா விடுதலையான நாளிலிருந்து ஆறாண்டுகளுக்கு தேர்தலிலும் போட்டி போட முடியாது.

    ஜெ உயிருடன் இருந்த போது அசைக்க முடியாத சக்தியாக அஇஅதிமுக விலும், ஆட்சியிலும் இருந்தவர் சசிகலா. ஆனால் இன்றைக்கு சசிகலா வால் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப் பட்ட எடப்பாடி பழனிசாமி ஒரு பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியில், சசிகலா வால் தான் முதலமைச்சராக ஆகவில்லை என்றும், எம்எல்ஏ க்கள் தான் தன்னை முதலமைச்சராக தேர்ந்தெடுத்தனர் என்றும் கூறியிருக்கிறார். ஆனால் சில நாட்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஒரு கூட்டத்தில் பேசும்போது, 'சசிகலா தவவாழ்கை வாழ்ந்தவர். அவரை பற்றி தவறாக யார் பேசுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது' என்று கூறினார்.

    இந்த பேச்சுக்களை வைத்து பார்க்கையில் சசிகலா வெளியில் வந்தவுடன் அஇஅதிமுக வில் நிச்சயம் ஒரு கலகம் இருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அது எத்தகைய கலகம், சிறிய அளவிலான கலகமா - ஆங்கிலத்தில் சொன்னால், 'A storm in a tea cup' - அல்லது அஇஅதிமுக வை உடைக்கும் அளவுக்கான கலகமா என்பதை இப்போதைக்கு யூகிப்பது கடினமானதாக இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியோ, ஓ பன்னீர் செல்வமோ, எம்ஜிஆர் அல்லது ஜெயலலிதா போல தலைவர்கள் கிடையாது. இவர்கள் எல்லாம் வெறும் அமைச்சர்கள் அல்லது மாவட்ட செயலாளர்கள் அந்தஸ்தில் உள்ள ஒரு அரசியல் ஆளுமைகள், அஇஅதிமுக வின் அரசியல் ஆளுமைகள் என்றுதான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    ஆனால் சசிகலா நிச்சயம் அப்படிப்பட்ட சாமானியமான ஒரு ஆளுமை அல்ல. ஜெ வுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நெருக்கமாக இருந்தவர். ஜெயலிலதா இந்த 30 ஆண்டு காலத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக முதலமைச்சராக இருந்த போதும், மற்றுமோர் 15 ஆண்டுகாலம் பதவியில் இல்லாத போதும் அஇஅதிமுக வை கட்டியாண்டது சசிகலா தான். தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்தில் உள்ள அஇஅதிமுக தொண்டனை கூட பெயர் சொல்லி அழைக்கும் திறன் கொண்டவராக சசிகலா இருந்தவர். இந்த 30 ஆண்டு காலத்தில் - ஜெ பதவியில் இருந்த போதும், இல்லாத போதும் - சசிகலா வை சந்திக்காமல் ஜெய லலிதா வை சந்தித்த அஇஅதிமுக தொண்டர்களையும், தலைவர்களையும் விரல் விட்டு எண்ணி விடலாம்.
    இந்த பின்புலத்தில் பார்த்தால் சசிகலா வின் எதிர்கால அரசியலை ஒதுக்கித் தள்ளுவது என்பது அவ்வளவு சுலபமானதல்ல. ஆனால் சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவது என்பதும் அவ்வளவு சுலபமானதல்ல.

    சசிகலா மீது மூன்று அந்நிய செலவாணி வழக்குகள் சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து கொண்டிருக்கின்றன. 1996 ல் மத்திய அமலாக்கத் துறையால் போடப்பட்ட வழக்குகள்தான் இவை. சசிகலா வுக்கு அரசியல் அபிலாஷைகள் தலை தூக்கினால் இந்த மூன்று வழக்குகளும் தூசி தட்டி எழுப்ப படலாம். இந்த வழக்குகளை தவிர வேறு சில வழக்குகளும் - பண மதிப்பழிப்பு காலத்தில் (demonetization) வாங்கப்பட்ட சொத்துக்கள், பினாமி சொத்துக்கள் - சசிகலா வுக்கு எதிராக தயார் நிலையில் இருப்பதாக விவரமறிந்த வட்டாரங்களில் பேசப்படுகிறது.
    சுருக்கமாக சொன்னால் சிறையிலிருந்து வெளியில் வரும் ச சிகலா அரசியலில், தீவிர அரசியலில் ஈடுபட்டால், அவருக்கு எதிராக மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் வேட்டை நாய்களாக ஏவி விடப்படும். கடந்த ஆறாண்டு காலத்தில் மோடி அரசின் அணுகுமுறையை பார்த்தவர்களுக்கு இதில் ஆச்சர்யம் ஏதுமிருக்காது. இதனை எவரும் மறுக்கவும் முடியாது.
    ஆகவே விடுதலையாகி வெளியில் வரவிருக்கும் சசிகலா வின் அரசியல் எதிர்காலம் மோடியின் கைகளில் தான் இருக்கிறது என்று சொன்னால், அது ரத்தின சுருக்கமாக நிலைமையை துல்லியமாக வர்ணிப்பதாக அமையும்.

    வரும் 27 ம் தேதி சசிகலா சிறையிலிருந்து விடுதலையாகி வெளியில் வருகிறார். அதே நாளில் சென்னையில் 80 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட ஜெயலலிதா வின் நினைவு மணி மண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் திறந்து வைக்க இருக்கின்றனர்.

    ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும்போது ஊழல் செய்து சொத்து சேர்த்தார் என்ற வழக்கில் அந்த குற்றச்சாட்டு உண்மைதானென்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் சசிகலா உள்ளிட்ட மூவரை நான்காண்டு காலம் சிறையில் தள்ளியது. ஜெயலலிதா மாண்டு போய் விட்டதால் அவர் சிறையில் அடைக்கப் படுவதிலிருந்து தப்பி விட்டார்.

    ஊழல் செய்த ஜெயலலிதா வுக்கு மணி மண்டபம், ஊழலுக்கு உடந்தையாக இருந்த சசிகலா வுக்கு நான்காண்டு சிறை தண்டனை என்பது காலத்தின் கோலம்தான் ............
    ஆர்.மணி

    English summary
    Sasikala release and its impack on Tamil Nadu politics
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X