For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தனபாலை முதல்வராக்க 60 எம்எல்ஏக்கள், 8 அமைச்சர்கள் பேசுகிறார்கள்... சொல்வது திவாகரன்

சபாநாயகர் தனபாலை முதல்வராக 60 எம்எல்ஏக்களும், 8 அமைச்சர்களும் எங்களோடு பேசி வருகின்றனர் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தனபால் முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கையை பல எம்எல்ஏக்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று திவாகரன் கூறியுள்ளார்.

சபாநாயகர் தனபால் முதல்வராக வேண்டும், அதே நேரத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இல்லாத அமைச்சரவை அமைய வேண்டும் என்பது தினகரன், திவாகரன் ஆகியோரின் வலியுறுத்தல்.

Sasikala's brother Divakaran warns Tamil Nadu CM

ஒ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் இணைந்ததில் இருந்தே இந்த கோரிக்கை வலுவடைந்து வருகிறது. எங்களுக்கு நேரடியாக 19 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தாலும் ஸ்லீப்பர் செல்களாக 50க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் இருக்கின்றனர் என்று தினகரன் பகிரங்கமாகவே அறிவித்தார்.

இதனிடையே சபாநாயகர் தனபாலை முதல்வராக்குவோம் என்று கடந்த சில நாட்களாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன், தற்போது 60 எம்எல்ஏக்களும், 8 அமைச்சர்களும் எங்களோடு பேசி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எம்எல்ஏக்கள் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் தாமதித்தால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று திவாகரன் தெரிவித்துள்ளார். திவாகரன் கிளம்பும் பீதியால் ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அதிரடி ஆலோசனையில் இறங்கியுள்ளனர்.

English summary
V. Divakaran, brother of Sasikala, said on Today suggested that Speaker P.Dhanapal be made the Chief Minister. Chief Minister Edappadi K. Palaniswami has lost moral authority to hold office as 19 party MLAs had submitted letters to the Governor withdrawing their support to him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X