For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல்- பெங்களூரு சிறையில் இருந்து தஞ்சை சென்றடைந்தார்!

கணவர் நடராஜனின் இறுதி சடங்கில் பங்கேற்க பரோலில் வருகிறார் சசிகலா.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    கணவனின் இறுதி சடங்கிற்காக பரோலில் வரும் சசிகலா

    சென்னை: உடல்நலக் குறைவால் காலமான கணவர் நடராஜன் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக சசிகலாவுக்கு பெங்களூரு சிறை நிர்வாகம் 15 நாட்கள் பரோல் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து பெங்களூரு சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா தஞ்சாவூர் சென்றடைந்தார்.

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் பெங்களூரு சிறையில் 4 ஆண்டு காலம் தண்டனையை அனுபவித்து வருகிறார் சசிகலா. கடந்த ஆண்டு நடராஜனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட போது பரோலில் வந்திருந்தார் சசிகலா.

    Sasikala to seek parole to attend Husbands funeral

    சென்னையில் இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா வீட்டில் தங்கி இருந்து கணவர் நடராஜனை மருத்துவமனைக்கு சென்று பார்த்து வந்தார் சசிகலா. கடந்த 16-ந் தேதி நடராஜன் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதனால் சசிகலா பரோலில் வருவார் என கூறப்பட்டது. இது தொடர்பாக அவரது வழக்கறிஞர்கள் பெங்களூரு சிறையில் நேற்று சசிகலாவுடன் ஆலோசனை நடத்தி இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை நடராஜன் உயிர் பிரிந்தது. இதையடுத்து நடராஜன் உடல் எம்பாமிங் செய்யப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னையில் சில மணிநேரங்கள் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், டிடிவி தினகரன், வீரமணி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்துக்கு நடராஜன் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு நாளை மாலை 4.30 மணிக்கு இறுதி சடங்குகள் நடைபெறுகிறது.

    விளாரில் நடைபெறும் இறுதிச் சடங்கில் சசிகலா பங்கேற்கிறார். இதற்காக நடராஜனின் இறப்பு சான்றிதழுடன் பரோல் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது.

    இதையடுத்து சசிகலாவுக்கு பெங்களூரு சிறை நிர்வாகம் 15 நாட்கள் பரோல் அனுமதி வழங்கியுள்ளது. சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா கார் மூலம் தஞ்சாவூருக்கு சென்றடைந்தார்.

    English summary
    Sasikala will seek the parole to attend Husban's Natarajan's funeral who died on today early morning.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X