For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சசிகலா சிறையில் இருப்பது வேதனை தருகிறது.. சீக்கிரம் ரிலீஸ் ஆக வேண்டும்.. ராஜேந்திர பாலாஜி உருக்கம்!

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் இருப்பது வேதனை அளிக்கிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் இருப்பது வேதனை அளிக்கிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்போது அவர் சிறை சென்று இரண்டு வருடம் 10 மாதம் ஆகிவிட்டது.

Sasikala situation makes me sad, She has to get released says Rajendra Balaji

இன்னும் ஒரு வருடம் அவர் சிறையில் இருக்க வேண்டும். ஆனால் தண்டனையை முழுதாக அனுபவிக்கும் முன் அவர் சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

இந்த நிலையில் சசிகலா சிறையில் இருப்பது குறித்தும், தேனி எம்பி ரவீந்திரநாத் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்தும் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், சசிகலா சிறையில் இருப்பது வருத்தம் அளிக்கிறது. அவர் சிறையில் இருந்து வேகமாக வெளியே வர வேண்டும் . அவருக்காக பிரார்த்தனை செய்கிறேன்.அவர் வெளியே வந்தால் மகிழ்ச்சியடைவேன்.

அவர் உடல் நிலை எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை. அவர் வெளியே வந்தால், கண்டிப்பாக அவரை சென்று வரவேற்பேன். வன்முறையால் அதிமுகவை அடக்க முடியாது. ரவீந்திரநாத் கார் மீது தாக்குதல் நடத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஏன் முதல் கல்யாண முறிவுக்கே பெரியார்தான் காரணம்னு உளறுங்களேன்.. முட்டாள் நாத்திகம்.. எஸ் வி சேகர் ஏன் முதல் கல்யாண முறிவுக்கே பெரியார்தான் காரணம்னு உளறுங்களேன்.. முட்டாள் நாத்திகம்.. எஸ் வி சேகர்

வார்த்தையை வார்த்தையால் எதிர்கொள்ள வேண்டும். ரவீந்திரநாத் நினைத்திருந்தால் திருப்பி அடித்திருக்க முடியும். எங்களுக்கு வீரம் இருக்கிறது. நாங்களும் சண்டை போடுவோம். நாங்கள் வீறு கொண்டால் சிங்கத்தைப் போல் சீறுவோம்.

அந்த அளவுக்கு அதிமுகவினர் கோழைகள் இல்லை. இதற்கு பின் திமுக இருக்கலாம் என்று சந்தேகம் எழுகிறது, என்று ராஜேந்திர பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.

English summary
Sasikala situation makes me sad, She has to get released says AIADMK Minister Rajendra Balaji.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X