For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பரோல் காலம் முடிவதற்கு 3 நாட்களுக்கு முன்பே சசிகலா சிறைக்கு திரும்புவது ஏன்?

பரோல் காலம் முடிய 3 நாட்களுக்கு முன்பாக சசிகலா சிறைக்கு செல்வது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பரோல் முடிவதற்குள் சிறைக்கு புறப்பட்டார் சசிகலா

    சென்னை: பரோல் காலம் முடிய 3 நாட்களுக்கு முன்பாக சசிகலா சிறைக்கு செல்வது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

    சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜன் கடந்த 20 ஆம் தேதி சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இரண்டாவது முறையாக பரோலில் வெளியே வந்தார் சசிகலா.

    கணவர் மறைவு

    கணவர் மறைவு

    கணவரின் இறுதிச்சடங்கு மற்றும் ஈமச்சடங்குகளில் பங்கேற்பதற்காக சசிகலா 15 நாட்கள் பரோலில் வெளியே வந்தார். அவரது பரோல் ஏப்ரல் மூன்றாம் தேதி நிறைவடைவதாக தகவல் வெளியானது.

    பல்வேறு கேள்விகள்

    பல்வேறு கேள்விகள்

    இந்நிலையில் சசிகலா இன்றே பெங்களூரு சிறைக்கு புறப்பட்டுவிட்டார். அவர் முன்கூட்டியே சிறைக்கு திரும்பியது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

    சசிகலா மும்முரம்

    சசிகலா மும்முரம்

    பொதுவாக நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே கைதிகளை விடுவிக்கும் நடைமுறை சிறைச்சாலைகளில் உள்ளது. இதைப் பயன்டுத்தி தண்டனைக் காலத்திற்கு முன்பே விடுதலை ஆவதில் சசிகலா மும்முரமாக உள்ளார்.

    பாராட்டைப் பெற

    பாராட்டைப் பெற

    இதன் ஒரு பகுதியாகவே பரோல் காலத்திற்கு முன்பு சசிகலா சிறைக்குத் திரும்புவதாக கருதப்படுகிறது. அதாவது, பரோல் காலத்திற்கு 3 நாட்கள் முன்னதாகவே திரும்பினால், சிறை நிர்வாகத்தின் பரிவைப் பெற முடியும். பாராட்டைப் பெற முடியும்.

    அது நன்னடத்தையாகவும் கருதப்படக் கூடும்.

    வாதிடலாம்

    வாதிடலாம்

    நாளை முன்கூட்டியே விடுதலை கோரி கோரிக்கை வைத்தால் கூட இதை சுட்டிக் காட்ட முடியும். சிறை நிர்வாகத்தில் விதிகளை தவறாமல் கடைபிடித்ததாக பேசமுடியும். மேலும் சொன்ன நாளுக்கு முன்பே சிறைக்கு வந்துவிட்டதாகவும் ஒழுங்குடன் நடந்து கொண்டதகாவும் வாதிட முடியும்.

    மனதில் வைத்தே

    மனதில் வைத்தே

    எப்படியாவது சிறையில் இருந்து முன்கூட்டியே வெளியே வர வேண்டும் என்ற முடிவில் உள்ள சசிகலா இவற்றையெல்லாம் மனதில் வைத்தே முன்கூட்டியே சிறைக்கு செல்வதாக கூறப்படுகிறது.

    English summary
    Sasikala leaves to Bengaluru jail before her Parole completes. Sasikala wants release from jail in advance by good behaving. That is why she left to Bengaluru jail before her parole over.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X