For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துணை ஜனாதிபதி பதவிக்கு குறிவைக்கும் கேரளா ஆளுநர் சதாசிவம்?

துணை ஜனாதிபதி பதவியை பெறுவதற்கான லாபிகளில் தீவிரமாக இறங்கியுள்ளாராம் கேரளா ஆளுநர் சதாசிவம்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: துணை ஜனாதிபதி பதவியை பெறுவதற்கான லாபிகளில் தமிழகத்தைச் சேர்ந்த கேரளா ஆளுநரான சதாசிவம் தீவிரமாக இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் சதாசிவம். அப்பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் பாஜக தயவில் கேரளாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார் சதாசிவம்.

ஜனாதிபதி பதவி

ஜனாதிபதி பதவி

தற்போது ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. ஜனாதிபதி பதவிக்கு பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பலரது பெயர்களும் அடிபடுகின்றன.

சதாசிவம்

சதாசிவம்

இதனிடையே துணை ஜனாதிபதி பதவிக்கு தம்மை நியமிக்கும் லாபிகளில் தீவிரமாக இறங்கியுள்ளாராம் கேரளா ஆளுநர் சதாசிவம். முதல் கட்டமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆதரவை கேட்டிருக்கிறார் சதாசிவம்.

எடப்பாடி ஆதரவு

எடப்பாடி ஆதரவு

முதல்வர் எடப்பாடியும் அதிமுக ஆதரவு தரும் என உறுதியளித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்தே டெல்லியில் பாஜக தலைவர்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறாராம் சதாசிவம்.

பாஜக தயக்கம்

பாஜக தயக்கம்

ஆளுநர் பதவியைப் பெற்றது போல எப்படியும் துணை ஜனாதிபதி பதவியை பெற்றே தீருவது என்கிற முடிவில் இருக்கிறாராம் சதாசிவம். ஆனால் பாஜக மேலிடம் சதாசிவத்தை தற்போதைய நிலையில் ஆதரிக்குமா என்பது சந்தேகம் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.

English summary
Sources said that the Kerala Governor Sathasivam trying to get the Vice President post.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X