For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சன் டிவிக்கு முறைகேடாக பி.எஸ்.என்.எல் இணைப்புகள்- சக்ஸேனாவிடம் சிபிஐ 10 மணி நேரம் விசாரணை!

By Mathi
Google Oneindia Tamil News

Saxena grilled by CBI in BSNL case
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மீதான பி.எஸ்.என்.எல் இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை‌ மீண்டும் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

சென்னை போட் கிளப்பில் உள்ள முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதிமாறனின் வீட்டிலிருந்து, அதிநவீன வசதி கொண்ட பி.எஸ்.என்.எல்.லின் 323 இணைப்புகள் முறைகேடாக சன் தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டது என்பது புகார்.

இதனால் சுமார் 440 கோடி ரூபாய் அளவுக்கு பி.எஸ்,என்.எல்லுக்கு இழப்பு ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, தயாநிதிமாறன் தனது சகோதரரின் நிறுவனத்திற்கு ஆதரவாக அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டு இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த இணைப்புகள் எந்தெந்த வகையில் பயன்படுத்தப்பட்டன என்பது குறித்து சன் டிவியின் முன்னாள் நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்ஸேனாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சுமார் 10 மணி நேரம் சக்சேனாவிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

English summary
In more trouble for former telecom minister Dayanidhi Maran, the CBI officials grilled Sun tv former admin Hansraj Saxena in BSNL Case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X