For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொளுத்தும் வெயிலால் அந்நிய பானத்துக்கு மாறிடாதீங்க... மெரினாவுல எடுத்த உறுதிமொழி ஞாபகம் இருக்கா?

வெயிலின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வெயிலில் இருந்து தப்ப அந்நிய பானத்துக்கு மாறிடாமல் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது எடுத்த உறுதிமொழியை நினைவுபடுத்திப் பாருங்கள்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வெயிலில் இருந்து தப்பிக்க அந்நிய பானங்களை நாடாமல் ஜனவரி மாதம் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது எடுத்த உறுதிமொழியை நினைவுபடுத்திப் பாருங்கள். உள்நாட்டு இயற்கை பானங்களையே பயன்படுத்துங்கள், விவசாயத்தோடு உடல் ஆரோக்கியத்தையும் பேணுங்கள்.

கோடை வெயில் தனது கோர முகத்தை இப்போதே காட்டத் தொடங்கிவிட்டது. உச்சிவேளை வெயிலில் வெளியில் தலைகாட்ட முடியாத அளவிற்கு சூரியன் சுள்ளென்று சுட்டெரிக்கிறது.

வாட்டும் வெயிலில் இருந்து தப்பிக்க உடல் சூட்டை தணிக்கும் பானங்களை தேடத்தொடங்கியுள்ளனர் மக்கள். ஆனால் மக்களே ஒன்றை மறந்துவிடாதீர்கள் மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பாரம்பரியத்தை காப்போம் அந்நிய பானங்களை தூக்கியெறிவோம் என்ற உறுதிமொழி நினைவில் இருக்கிறதா.

வேண்டாமே அந்நிய பானங்கள்

வேண்டாமே அந்நிய பானங்கள்

கோடை காலம் வந்தாலே அந்நிய நாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு குஷி தான். வேற என்ன மக்கள் அவர்களின் குளிர்பானங்களுக்கு அடிமையாகி இருப்பார்கள் இதனால் விற்பனையும் அள்ளிடும்ல. ஆனால் ரொம்ப வெயில் இல்ல ரொம்ப கிரக்கமா இருந்தா 35 ரூபா கொடுத்து பெப்ஸி, கோக் வாங்கி பருகி உங்களுடைய ஆயுளை குறைச்சுக்காதீங்க

இயற்கையை ஊக்குவிப்போம்

இயற்கையை ஊக்குவிப்போம்

20 ரூபாய் முதலே கிடைக்கிறது இளநீர், 10 ரூபாய் தான் தர்பூசணி, 5 ரூபாய் தான் நுங்கு , 5 ரூபாய் தான் எலுமிச்சை , 5 ரூபாய் தான் வெள்ளரிப்பழம், 40 ரூபாய் தான் திராட்சை. இவற்றை வாங்கி உண்பதன் மூலம் உடம்பில் இருக்கும் சூடும் தனியும் நம்ம விவசாயிகள் வாழ்க்கையும், நாடும் செழிக்கும்

ஆரோக்கியம் பேணுவோம்

ஆரோக்கியம் பேணுவோம்

நீங்க வாங்குற ஒவ்வொரு இளநீரும் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒவ்வொரு வேளை சாப்பாடு. நம்ம நாட்டு விவசாயத்தைக் காக்க இன்று முதல் முயல்வோம், பெப்ஸி, கோக் போன்ற குளிர் பானங்களை விட்டுட்டு வாழ்வோம்.

வேண்டாமே கெமிக்கல் பானங்கள்

வேண்டாமே கெமிக்கல் பானங்கள்

விவசாயத்தை காப்போம், விவசாயியை வாழ வைப்போம், அந்நியனை விரட்டியடிப்போம். ஒரு நாட்டில் விவசாயம் தழைத்தால் தான் அந்த நாட்டின் வளர்ச்சியும் முன்னேற்றப்பாதையில் இருக்கும் என்பதை மறக்காதீர்கள். வேண்டாம் கெமிக்கல் பானங்கள் என்பதில் மட்டும் உறுதியாக இருங்கள். கோடை வெயில் தொடர்பான மேலும் செய்திகளுக்கு .

English summary
Say gudbye to foreign cool drinks have only agri oriented juices and fruits to tackle this summer, Wake up Tn people do recall the resolutions we taken at Marina Jallikattu protests.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X