For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எஸ்பிஐ வங்கி ஏடிஎம்-மில் பணம் எடுக்க, இனி ஓடிபி அவசியம்.. புத்தாண்டில் இருந்து புதிய முறை

Google Oneindia Tamil News

சென்னை: எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கு இனி ஓடிபி கட்டாயம் ஆகும். இந்த திட்டம் வரும் ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது.

வங்கிகளின் ஏடிஎம்களில் ஸ்கிம்மர் எனப்படும் ரகசிய உளவு கருவியை பொருத்தி அதன் மூலம் ஏடிஎம் கார்டு நம்பர், பின் நம்பர் , ரகசிய குறியீட்டு ஆகியவற்றை அறிந்து அதை வைத்து போலி ஏடிஎம்கார்டுகளை உருவாக்கி பணத்தை திருடும் சம்பவங்கள் நாடு முழுவதும் அதிகரித்து வந்தது.

sbi otp: otp must for with drawn cash from SBI ATM above Rs10000 from 1st January

தையடுத்து போலி ஏடிஎம் கார்டுகளை தயாரித்து பணம் எடுப்பதை தடுக்கும் வகையில் இனி 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஏடிஎம்களில் பணம் எடுத்தால் ஓடிபி கட்டாயம் என்ற திட்டத்தை கனரா வங்கி முதல் முதலா கடந்த ஆண்டு கொண்டு வந்தது.

இந்நிலையில் ஒன்டைம் பாஸ்வேர்டு எனப்படும் ஓடிபி திட்டத்தை எஸ்பிஐ வங்கியும் அமலுக்கு கொண்டுவருகிறது.

மறந்துடாதீங்க.. இந்த 4 நிதி சார்ந்த வேலைகளுக்கு டிச.31 தான் கடைசி தேதி... விவரங்கள் மறந்துடாதீங்க.. இந்த 4 நிதி சார்ந்த வேலைகளுக்கு டிச.31 தான் கடைசி தேதி... விவரங்கள்

இதன்படி இனி எஸ்பிஐ ஏடிஎம்களில் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்தால் ஒடிபியை வாடிக்கையாளர்கள் பதிவு செய்த மொபைலுக்கு அனுப்பி வைக்கும். அதை அவர்கள் பதிவு செய்தால் மட்டுமே இனி 10 ஆயிரத்துக்கு மேல் எடுக்க முடியும். ஆனால் இந்த ஒடிபி திட்டம் என்பது இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை பணம் எடுக்கும் போது மட்டுமே அமலில் இருக்கும். மற்ற நேரங்களில் ஓடிபி கேட்காது.

English summary
SBI to introduce new way of ATM cash withdrawal from 1st January . The new OTP-based ATM withdrawal will be applicable for transactions above Rs 10,000, between 8 pm to 8 am.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X