For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இது வேறையா.. ஏடிஎம்மில் பணம் எடுக்கும் அளவை குறைத்தது எஸ்பிஐ!

Google Oneindia Tamil News

டெல்லி: தற்போது நாளொன்றுக்கு 40 ஆயிரம் ரூபாயை ஏடிஎம் களில் இருந்து எடுத்துக் கொள்ளும் வசதி பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு, உள்ளது. ஆனால் இது 20 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 31ஆம் தேதி முதல் புதிய விதிமுறை அமலுக்கு வரவுள்ளது. பணப் புழக்கம் குறைய வேண்டும் என்பது இதன் நோக்கமாகும். இதனால் மக்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு, காஸ் சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு காரணமாக மக்கள் கையில் பணம் இல்லாமல் தவிக்கும்போது இப்படி ஒரு விதிமுறை வந்துள்ளது.

[ சபரிமலையில் பெண்களுக்கு தனி வரிசை கிடையாது.. தேவசம் போர்டு அதிரடி ]

பண அளவு குறைப்பு

பண அளவு குறைப்பு

ஏடிஎம்களில் மோசடியாக பணத்தை எடுப்பது தொடர்பான புகார்கள் அதிகரித்த வண்ணம் இருப்பதும், இந்த புதிய விதிமுறைகளை அமல்படுத்த ஒரு காரணம் என்று பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பணமற்ற டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தில் ஏடிஎம்களில் எடுக்கப்படும் பணத்தின் மதிப்பு அளவை குறைப்பதற்கு வங்கி முடிவு செய்துள்ளது.

பண மதிப்பிழப்பு

பண மதிப்பிழப்பு

பண பரிமாற்றத்தை குறைத்து, டிஜிட்டல் பரிமாற்றத்தை அதிகரிப்பதும் நோக்கத்திற்காக பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் டிஜிட்டல் பரிமாற்றம் என்பது அதிகரித்தது. ஆனால் மறுபடியும் தற்போது பணப்பரிமாற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில்தான் பாரத ஸ்டேட் வங்கி இந்த முடிவுக்கு வந்துள்ளது.

பணப்புழக்கம்

பணப்புழக்கம்

பண மதிப்பிழப்பிற்கு முன்பாக நாட்டில் 17.9 ட்ரில்லியன் பணம் புழக்கத்தில் இருந்தது. ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டில் புழங்கும் பணத்தின் மதிப்பு 18.5 ட்ரில்லியனாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிஜிட்டல் மோசடி

டிஜிட்டல் மோசடி

ஏடிஎம்களில் skimming முறையில், டெபிட் கார்டு விவரம் களவாடப்பட்டு பணம் எடுக்கப்படுவதாக, புகார்கள் அதிகரித்துள்ளன. இதை முன் வைத்து, பண பரிமாற்றத்தை குறைக்க எஸ்பிஐ முடிவு செய்துள்ளதாம். ஆனால் ஆன்லைன் வர்த்தகத்திலும் மோசடிகள் அதிகரித்து வருவதை யாருமே கணக்கில் எடுப்பதில்லையே ஏன்? கையில் பணம் இல்லாமல், சிறு நகரங்களிலும், கிராமங்களில் உள்ளோரும் அவதிப்படுவதை யாரும் கருத்தில் கொள்வதில்லையே ஏன்?

English summary
From the end of this month, SBI customers will be able to withdraw only Rs 20,000 per day as against the earlier limit of Rs 40,000.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X