Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசியல் பழிவாங்கலுக்காக தயாநிதி மாறனை கைது செய்ய சி.பி.ஐ. முயற்சி: உச்சநீதிமன்றம் காட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியல் பழிவாங்கலுக்காகத்தான் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை கைது செய்ய சி.பி.ஐ. முயற்சிக்கிறது என்று உச்சநீதிமன்ற நீதிபதி தாக்கூர் கடும் காட்டமாக கருத்து தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமைச்சர் என்ற முறையில் தயாநிதி மாறன் தமக்கு ஒதுக்கப்பட்ட தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தினார்; அவரது சகோதரர் கலாநிதி மாறன் நடத்தும் சன் டிவியின் ஒளிபரப்புக்கு அது பயன்படுத்தப்பட்டதால் அரசுக்கு நட்டம் ஏற்பட்டது என்பது சி.பி.ஐ. புகார்.

SC tells CBI not to arrest Dayanidhi Maran for political vendetta

இந்த வழக்கில் தயாநிதி மாறனுக்கு சென்னை உயர்நீதிமன்ற அளித்திருந்த முன் ஜாமீன் சி.பி.ஐ. கேட்டுக் கொண்டதால் ரத்து செய்யப்பட்டது. இதனால் 3 நாட்களுக்குள் சி.பி.ஐ. முன் சரணடையவும் தயாநிதி மாறனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தயாநிதி மாறன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், கோபால கவுடா, ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

தயாநிதி மாறன் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் ஆஜராகி வாதிட்டதாவது:

மத்திய அமைச்சராக இருந்த தயாநிதிமாறன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் சி.பி.ஐ. அவர் மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் 2013ல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணைக்கு சி.பி.ஐ. எப்போதெல்லாம் அழைத்ததோ, அப்போதெல்லாம் தயாநிதி மாறன் ஆஜராகி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்.

சமீபத்தில் கூட ஜூலை 1,2,3 தேதிகளில் சி.பி.ஐ. அழைத்தபோது அவர் நேரில் சென்று விசாரணையில் ஆஜராகியுள்ளார். சி.பி.ஐ. கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளித்து பதில் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல், சி.பி.ஐ.க்கு பல ஆவணங்களுடன் கூடிய 4 கடிதங்களையும் அனுப்பியுள்ளார். அழைக்கும் போதெல்லாம் வழக்கு விசாரணைக்கு ஆஜராகி தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுத்து கொண்டிருக்கும் நிலையில், அவரை கைது செய்ய சி.பி.ஐ. துடிப்பதன் உள்நோக்கம் தெரியவில்லை. அவர் மீது இந்த வழக்கு பொய்யாக புனையப்பட்டுள்ளது. மற்ற அனைத்து அமைச்சர்களுக்கும் தொலைபேசி இணைப்பு வழங்குவது போல் தான் தயாநிதி மாறனுக்கும் இணைப்பு வழங்கப்பட்டது.

இந்த இணைப்புகளை அவர் முறையாகவே பயன்படுத்தியுள்ளார். அதற்கு கூட பி.எஸ்.என்.எல். கட்டணம் வசூலிக்க பில் அனுப்புமானால் அதையும் கட்ட தயாராக இருக்கிறேன் என்று அவர் சி.பி.ஐ.யிடம் தெளிவாக கூறியுள்ளார். எம்டிஎன்எல், பிஎஸ்என்எல் நிறுவனங்களுக்கு தயாநிதிமாறன் பெயரில் எந்த கட்டண நிலுவை தொகையும் இல்லை என்று 2009ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ந் தேதி லோக்சபா செயலகம் அதிகாரபூர்வமாக தெளிவுபடுத்தியிருக்கிறது.

எனவே இந்த வழக்கு யூகத்தின் அடிப்படையிலேயே தொடரப்பட்டுள்ளது. தான் பயன்படுத்திய இணைப்புக்கு பி.எஸ்.என்.எல். நிறுவனம் பில் அனுப்புமானால் அதனை உடனே கட்ட தயாராக இருக்கிறேன் என இப்போதும் கூறியுள்ளார். இதை சி.பி.ஐ. கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. எனவே, அவர் மீதான இந்த வழக்கிற்கு தடைவிதிக்க வேண்டும். இவ்வாறு அவர் வாதிட்டார்.

சி.பி.ஐ. சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். இதை கேட்ட நீதிபதி தாக்கூர் கூறியதாவது:

  • 2013ஆம் ஆண்டு போடப்பட்ட இந்த வழக்கில் இதுவரை எத்தனை பேரை கைது செய்துள்ளீர்கள்?
  • முதல் தகவல் அறிக்கையில் 3 பி.எஸ்.என்.எல். அதிகாரிகளின் பெயர்கள் உள்ளன. அவர்களில் ஏதாவது ஒரு அதிகாரியை கைது செய்துள்ளீர்களா?
  • 3 ஆண்டுகள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள். அதைவிட்டுவிட்டு தயாநிதி மாறனை மட்டும் கைது செய்ய முயற்சி செய்வது ஏன்?
  • ரூ.1 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை எவ்வாறு மதிப்பீடு செய்தீர்கள்?
  • தயாநிதி மாறன் பயன்படுத்திய தொலைபேசி இணைப்புகளை கணக்கிட மீட்டர் ஏதாவது பொருத்தியிருந்தீர்களா? அதற்கு பில் ஏதாவது இருக்கிறதா
  • (இதற்கு முகுல் ரோத்தகி, மீட்டர் எதுவும் பொருத்தவில்லை, பில் எதுவும் கோரவில்லை என்றார்.)
  • தொலைபேசி இணைப்பை தயாநிதி மாறன் பயன்படுத்தினார் என்றால் அது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டுமா, பி.எஸ்.என்.எல். நிறுவனங்கள் சார்ந்த அதிகாரிகள், தொழில்நுட்ப அதிகாரிகள் ஆகியோரிடம் கேட்டால் விவரம் தெரிந்துவிடுமே.
  • தயாநிதி மாறனை கைது செய்வதில் சிபிஐ அவசரம் காட்ட வேண்டுமா?
  • அதிகாரிகளை கைது செய்தீர்களா, தயாநிதி மாறனை இந்த வழக்கில் குற்றவாளியாக்க முயற்சி செய்கிறீர்களா?
  • அவரைக் கைது செய்வது உங்களுக்கு கவுரவம் என்று நினைக்கிறீர்களா?
  • தொலைபேசி இணைப்புகளுக்கான எந்த பில்லும் அவருக்கு தரப்படவில்லை. அப்படி பில் தரப்பட்டாலும் அதைக் கட்ட அவர் தயாராக உள்ளார்.
  • எந்த பில்லும் தரவில்லை என்று நீங்களே கூறுகிறீர்கள். நீங்கள் பில்லைக் கொடுங்கள் அவர் பணத்தை கட்டிவிடுவார்.
  • அதிகாரிகளை கைது செய்யாமல் தயாநிதி மாறனை மட்டும் கைது செய்ய துடிப்பது ஏன்?
  • பதவி காலம் முடிந்த பிறகும் அரசு பங்களாக்களை காலி செய்யாமல் ஏராளமானோர் அவற்றை பயன்படுத்தி வருகிறார்கள். அதெல்லாம் நீங்கள் ஊழல் என்று சொல்வீர்களா?
  • உத்தரபிரதேச மாநிலத்தில் 8 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்தது. அதில் 200 பேருக்கு மேல் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அந்த வழக்கில் எத்தனை பேரை கைது செய்துள்ளீர்கள்?
  • ரூ8 ஆயிரம் கோடி பெரிதாக தெரியவில்லையா உங்களுக்கு?
  • ரூ1 கோடி மட்டும் பெரிதாக தெரிகிறதே ஏன்? அவரை மட்டும் ஏன் கைது செய்ய முயற்சி செய்கிறீர்கள்?
  • தயாநிதி மாறன் ஒரு அரசியல்வாதி. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இது போன்ற செயல்களில் சிபிஐ ஈடுபடக்கூடாது.
  • அமைச்சர் சொல்லித்தான் அதிகாரிகள் செய்தார்கள் என்றால், பில் கட்டமாட்டேன் என்றால் அதிகாரிகள் விட்டுவிடுவார்களா?
  • இந்த வழக்கு அரசியல் உள்நோக்கத்துடன் புனையப்பட்டதாகவே நீதிமன்றம் கருதுகிறது.
  • பொருளாதார குற்றங்களுக்காக முன் ஜாமீன் ஏன் வழங்குவதில்லை. இது தொடர்பாக நீங்கள் விளக்க வேண்டும்.
  • சி.பி.ஐ. வாதத்தை ஏற்க முடியாது. தயாநிதி மாறனை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கிறோம்.
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+