For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'ஹார்ட் அட்டாக்'கிலும் பேருந்தை நிறுத்தி மாணவர்கள் உயிரைக் காப்பாற்றிய ஓட்டுநர் - வீடியோ

கிருஷ்ணகிரி தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் திம்பராயன், தனக்கு மாரடைப்பு வந்தபோதும், பேருந்தை பள்ளித்தில் நிறுத்தி மாணவர்களைக் காப்பாற்றினார். ஆனால் அவர் உயிர் பிரிந்தது.

By Suganthi
Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி வேப்பனஹள்ளியில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், அவர் பேருந்தை பள்ளத்தில் மோதி பத்திரமாக நிறுத்தினார். பேருந்தை நிறுத்தியதும் அவர் உயிர் பிரிந்தது.

கிருஷ்ணகிரி அருகே வேப்பனஹள்ளியில் தனியார் மழலைகள் பள்ளி இயங்கி வருகிறது. சுற்றுவட்டார ஊர்களில் இருந்து மாணவர்களை பேருந்தில் ஏற்றி வந்து, பள்ளியில் விடும் வகையில் அப்பள்ளியில் பேருந்து வசதி செய்யப்பட்டிருந்தது.

 School Bus drver thimbarayan saved children life even he got heart attack

இந்த பள்ளியின் பேருந்து ஓட்டுநர் திம்பராயன் வழக்கம்போல் மாணவர்களை பேருந்தில் ஏற்றிக்கொண்டு பள்ளிக்குச் செல்லும்போது வழியில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை உணர்ந்த அவர், பேருந்தில் இருக்கும் மாணவர்களை காப்பாற்றும் விதமாக பள்ளத்தில் பேருந்தை இறக்கி நிறுத்தினார்.

அதன்பிறகு அவருடைய பிரிந்தது. உயிர் போகும் நேரத்திலும் பேருந்தை பத்திரமாக ஒரு இடத்தில் நிறுத்தி மாணவர்களுக்கு எதுவும் நேராதவாறு நடந்துகொண்ட அவரின் சாமர்த்தியத்தை அனைவரும் பாரட்டினர்.

English summary
In Krishnagiri, veppanahalli a private school bus driver got severe heart attack while driving. Even though he dropped the bus in a furrow and saved the school children but he lost his life.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X