For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பள்ளி, கல்லூரி பஸ்களில் அதிமுகவினர் பயணம்.. நந்தனத்துக்கு படையெடுத்த அரசு பஸ்கள்.. மக்கள் அவதி

Google Oneindia Tamil News

சென்னை: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள மற்ற மாவட்டங்களில் இருந்து வந்த அதிமுகவினரை விழா நடைபெறும் இடத்துக்கு பள்ளி, கல்லூரி பேருந்துகள் மூலம் அழைத்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நேற்று நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்காக பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

School buses used to travel ADMK cadres for centenery celebration

இவர்கள் சென்னையில் விழா நடைபெறும் இடத்துக்கு வருவதற்கு பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகள் பயன்படுத்தப்பட்டன. மோட்டார் வாகன சட்டத்தின்படி கல்வி நிறுவனங்களின் பேருந்துகள் மாணவர்களையும் அதன் ஊழியர்களையும் அழைத்து செல்லவே பயன்படுத்த வேண்டும்.

ஆனால் விதிகளை மீறி சிவகங்கை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களின் பதிவு எண் கொண்ட பள்ளி- கல்லூரி பேருந்துகள் நந்தனத்தை நோக்கி செல்வதை காணமுடிந்தது.

[ ஆண் காக்கிக்குள் சுரந்த தாய்மை.. அழுவதை விட்டு சிரித்த குட்டிப் பாப்பா.. வைரல் போட்டோ! ]

அதுபோல் மாலை வேளைகளில் கூட்டத்தை சமாளிக்க மாநகர பேருந்துகளை சிறப்பு சேவை என்ற பெயரில் பயன்படுத்தியதும் தெரியுவந்துள்ளது. விழாவுக்காக அனுமதி மீறி வைக்கப்பட்ட பேனர்களை நீக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தற்போது விதிகளை மீறி பள்ளி-கல்லூரி பேருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
School and College buses were used to take ADMK cadres from other place to Nandanam where MGR Centenery function held.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X