For Daily Alerts
Just In
தடுப்பணையில் ஜாலியாக குளிக்கச் சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்த பரிதாபம் - வீடியோ
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் வனகஹள்ளியில்,தடுப்பணையில் குளிக்கச் சென்ற எட்டாம்வகுப்பு சிறுவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சத்தியமங்கலம் அருகில் உள்ள ஊர் வனகஹள்ளி. இந்த ஊரைச் சேர்ந்த எட்டாம் வகுப்புப் படிக்கும் சிறுவர்கள் சுதீஷ் மற்றும் சித்தராஜ் ஆகிய இருவரும் தடுப்பணையில் குளிக்கச் சென்றுள்ளனர்.

அப்போது, இருவரும் நீரில் மூழ்கி தத்தளித்து இறந்துள்ளனர். அதில் சுதிஷின் உடலை தீயணைப்புப் படையினர் மீட்டுவிட்டனர். ஆனால் சித்தராஜ் உடல் இன்னும் கிடைக்காததால் தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியே சோகமயமாக உள்ளது.