For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மன அழுத்தமே பிளஸ்-2 மாணவி மது அருந்தக் காரணம் - கவுன்சிலிங் அளிக்க பள்ளிக்கு உத்தரவு

Google Oneindia Tamil News

கோவை: கோவையில் பள்ளி மாணவி மது போதையில் பொது இடத்தில் ரகளை செய்த விவகாரத்தில் அப்பெண்ணுக்கு கவுன்சிலிங் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலமாக அவர் மன அழுத்த பாதிப்புகளில் இருந்து வெளிவரும் முயற்சியினை பள்ளி நிர்வாக மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் தனியார் பள்ளி பிளஸ் 2 ஒருவர் மாணவி மது அருந்திவிட்டு பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் குறித்து மாவட்ட மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் தலைமையில் அதிகாரிகள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

school requested to give counselling to the plus-2 girl

விசாரணைக்கு வந்த மாணவியின் பெற்றோர் மகளின் நிலையை கருதி வருந்தினர். தொடர்ந்து தான் பணி நிமித்தமாக வெளியூரில் இருப்பதால், மனைவி தன் மகளை கவனித்து வந்ததாகவும், தன்னால் மகளின் நடவடிக்கையை தெரிந்து கொள்ள முடியவில்லை என மாணவியின் தந்தை கூறியுள்ளார்.

இதுகுறித்து கோவை மாவட்ட மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் கீதா, "பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோரிடம் தனித்தனித்தனியாக விசாரணை நடைபெற்றுள்ளது. பேஸ்புக் பயன்பாடு அதிகமான காரணத்தால் மாணவி பாதிக்கப்பட்டது தெரிந்துள்ளது. மேலும், மன அழுத்தத்தில் சிக்கிய மாணவிக்கு உளவியல் ஆலோசனை வழங்க பள்ளிக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், விசாரணை அறிக்கை தொகுப்பு மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது", என்று தெரிவித்துள்ளார்.

English summary
Metric school association announced to give counseling to the girl who was drunk and created controversy in Coimbatore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X