For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நுங்கம்பாக்கத்தை அதிரவைத்த மாணவிகள்... சமூக வலைத்தளத்தில் குவியும் பாராட்டு

நீட் எதிர்ப்பு போராட்டம் நடத்திய மாணவிகளுக்கு சமூக வலைத்தளத்தில் பாராட்டு குவிகிறது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: நுங்கம்பாக்கத்தில் அரசு பள்ளி மாணவிகள் நடத்திய போராட்டத்திற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிகிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளை அடித்த தலைமை ஆசிரியருக்கு எதிர்ப்பு அதிகரித்துள்ளது. கண்டனங்கள் குவிகின்றன.

மாணவிகளை அடித்த தலைமை ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை வலுவடைந்துள்ளது.

நீட் எதிர்ப்பு போராட்டம்

தமிழ் பசங்க ஐமிக்கி கம்மல் பார்த்துக்கொண்டிருந்த போது, இளம்பெண்கள் #நீட் எதிர்ப்பு போராட்டத்தை தங்கள் கையில் எடுத்துவிட்டனர்! என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.

பேரழகிகள்

ஜிமிக்கி கம்மல் ஆடியவர்கள் அழகிகள் என்றால் நீட் தேர்வுக்காக போராடிய தங்கைகள் பேரழகிகள் என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.

நாங்க படிச்சா தீட்டா

ஜல்லிக்கட்டுக்கு பீட்டா #அனிதா சாவுக்கு #நீட் டா மருந்து வாங்க சீட்டா நாங்க படிப்பது தீட்டா என்று மாணவிகளின் முழக்கத்தை பதிவிட்டுள்ளார்

ரௌத்திரம் பழகு

போலீஸார் கடுமை காட்டியதால் ஆவேசமடைந்த மாணவிகள். இச்செயல் ஆவேசமல்ல,இது புரட்சி,இதுவே ரௌத்திரம் பழக ஏதுவான மேடை

வேலை போயிரும்

எல்லோருக்கும் டிசி கொடுக்குறேன்னு சொல்றாங்க. எப்படி கொடுக்கமுடியும். நாங்க எல்லாம் ப்ளஸ் 2 படிக்கிறோம். எல்லாருக்கும் டிசி கொடுத்தா எப்படி ரிசல்ட் காட்ட முடியும் என்று கேட்டார் ஒரு மாணவி. இதை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.

தலைமை ஆசிரியைக்கு எதிர்ப்பு

நுங்கம்பாக்கம் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய பள்ளி மாணவிகளை தலைமை ஆசிரியை அடித்தார். இதனால் கோபம் கொண்ட சமூக வலைஞர்கள் மாணவிகளை அடித்த தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.

உச்சநீதிமன்றம் தடை

சாலைமறியல் செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதே என்று கேட்டதற்கு விதித்து விட்டு போகட்டும் என்று தில்லாக சொன்னார் ஓரு மாணவி.

அனைவருக்காகவும் போராட்டம்

இது அனைவருக்குமான போராட்டம் என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.

தங்கைகள் போராட்டம்

நம் தங்கைகளுக்காக தங்கைகள் போராட்டம் என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.

நீதி கேட்டு போராட்டம்

மூட்டைத்தூக்கும் பெரியப்பாவின் மகளிற்கு நீதி கேட்டு இதோ என் தங்கைகள் புத்தகமூட்டையுடன் போராடுகிறார்கள் என்று பதிவிட்டுள்ளார். ஒரு இளைஞர். நீட் தேர்வுக்கு நோ சொல்லுங்கள் என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.

English summary
More than 30 students from the Government Girls Higher Secondary School in Mahalingapuram gathered on Nungambakkam road, the students raised slogans against Neet and refused to move away despite requests from the police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X