For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடியரசு தினத்தை கடலை மிட்டாயுடன் கொண்டாடிய தேவக்கோட்டை பள்ளி மாணவர்கள்!

தேவக்கோட்டையில் அரசு உதவிப்பெறும் பள்ளியில் மாணவர்கள் கடலை மிட்டாய் வழங்கி குடியரசு நாளை கொண்டாடினர். சாக்லேட்டை தவிர்த்து அவர்கள் கடலை மிட்டாயுடன் குடியரசு நாள் கொண்டாடியிருப்பது வியப்பை ஏற்படுத்தியு

Google Oneindia Tamil News

தேவக்கோட்டை: தேவக்கோட்டையில் அரசு உதவிப்பெறும் பள்ளி ஒன்றில் இன்று குடியரசு நாள் விமர்சியாக கொண்டாடப்பட்டது. அப்போது அவர்கள் சாக்லேட்டுக்கு பதில் கடலை மிட்டாயை வழங்கி குடியரசு நாளை கொண்டாடினர்.

புதுக்கோட்டை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா நடைபெற்றது. இதில் பள்ளியில் பயிலும் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

விழாவிற்கு வந்தவர்களை பள்ளி ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

மூவர்ண கொடியேற்றிய மருத்துவர்

மூவர்ண கொடியேற்றிய மருத்துவர்

குடியரசு தின விழா தொடர்பாக மாணவர்கள் சிலர் பேசினர். இந்நிகழ்ச்சியில் திருவேகம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பொது மருத்துவர் சிவசங்கரி கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார்.

குடியரசு தினத்துக்கும் வாழ்த்து சொல்லுங்கள்

குடியரசு தினத்துக்கும் வாழ்த்து சொல்லுங்கள்

அப்போது தீபாவளி, பொங்கல் பண்டிகை போன்று குடியரசு தின விழாவையும் அனைவருக்கும் வாழ்த்து சொல்லி கொண்டாட வேண்டும் என அவர் கூறினார். காந்தியடிகளின் அகிம்சை வழியை அனைவரும் பின்பற்ற வேண்டும் என மாணவர்களுக்கு அவர் கோரிக்கை விடுத்தார்.

இலக்குகளை நிர்ணயிங்கள்

இலக்குகளை நிர்ணயிங்கள்

குடியரசு தினத்தன்று மக்களக்கு உதவும் வகையில் மாணவர்கள் இலக்குகளை நிர்ணயித்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர் சிவசங்கரி வேண்டுகோள் விடுத்தார்.

கடலை மிட்டாய் கலாசாரம்

கடலை மிட்டாய் கலாசாரம்

இதைத்தொடர்ந்து மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவருக்கும் கடலை மிட்டாய் இனிப்பு வழங்கப்பட்டது. இப்பள்ளியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக மாணவர்களின் பிறந்த நாட்களுக்கு அவர்களே சாக்லேட் தவிர்த்து கடலை மிட்டாயியை இனிப்பாக வழங்கி வருகின்றனர்.

பலர் பயனடையும் கடலை மிட்டாய்

பலர் பயனடையும் கடலை மிட்டாய்

நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சாக்லேட்டை தவித்து தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான கடலை மிட்டாய்க்கு முக்கியத்துவம் கொடுப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள கடலை விவசாயிகள் சிறு தொழில் வணிகர்கள் என பலரும் பயன்பெறும் வகையில் கடலை மிட்டாய் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது. விழா நிறைவாக மாணவி காயத்ரி நன்றி கூறினார்.

English summary
Government affiliated school students celebrating Republic day in devakottai with peanut candy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X