For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசு பொருட்காட்சியில் மாணவர்களின் கண்கவர் கண்காட்சி!

காரைக்குடியில் நடைபெற்ற அரசு பொருட்காட்சியில் பள்ளி மாணவர்களின் படைப்புகள் இடம்பெற்றது.

Google Oneindia Tamil News

சிவகங்கை: காரைக்குடியில் நடைபெற்ற அரசு பொருட்காட்சியில் பள்ளி மாணவர்களின் படைப்புகள் இடம்பெற்றது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மகர்நோன்பு திடலில் அரசு பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த பொருட்காட்சியில் பள்ளிக்கல்வித்துறைக்கு என தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இங்குள்ள இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் ,காரைக்குடி மகர்நோன்பு திடலில் நடைபெறும் அரசு பொருட்காட்சியில் படைப்புகளை கட்சிப்படுத்தியிருந்தனர்.

 மாணவர்களின் படைப்புகள்

மாணவர்களின் படைப்புகள்

மாணவர்கள் தங்களது அறிவியல் படைப்புகளையும், பழங்காலத்தில் மக்கள் பயன்படுத்திய பொருட்கள், ஓலைச்சுவடிகள், பல்வேறு அஞ்சல் தலைகள், நாணயங்கள்,ஏடிஎம் இயந்திர மாதிரி, 1960களில் இருந்து தற்போது வரை மக்கள் பயன்படுத்திய மின்சார பல்புகளை இயக்க்கும் சுவிட்சுகள், வெல்லம் வந்தால் மக்களுக்கு தெரியப்படுத்தும் கருவிகள், காற்றலை மாதிரிகள், சூர்ய குடும்பத்தில் உள்ள கோள்கள், கணித மேதை இராமனுஜம் பற்றிய குறிப்புகள், மாணவர்கள் செய்த கைவினைப்பொருட்கள் போன்றவைகளை காட்சிப்படுத்தியும், அந்த படைப்புகளுக்கான விளக்கங்களையும் சிறப்பாக கொடுத்தனர்.

 கண்கவர் கலைநிகழ்ச்சிகள்

கண்கவர் கலைநிகழ்ச்சிகள்

மேலும் நேற்று மாலை 6.00 மணியளவில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. தலைமையாசிரியர் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். மாணவர்களின் நீயா நானா நிகழ்ச்சி, மாணவர் பட்டிமன்றம், மாணவர்களின் நடன நிகழ்ச்சிகள் மற்றும் நாடகம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

 ஏராளமானோர் கண்டுகளிப்பு

ஏராளமானோர் கண்டுகளிப்பு

இந்நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சகாய அமலன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் அழகு சுந்தரி, பல்வேறு பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பெற்றோர்கள் மாணவர்கள் காட்சிப்படுத்திய படைப்புகளை பார்வையிட்டும், கலைநிகழ்ச்சிகளை கண்டு களித்தும், மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.

 படைப்புகளை பார்வையிட்ட மக்கள்

படைப்புகளை பார்வையிட்ட மக்கள்

அரசு பொருட்காட்சியை பார்வையிட வந்த பொது மக்களும், மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டு பாராட்டி சென்றனர். பட்டதாரி ஆசிரியர் கோமதி ஜெயம் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிகளை பட்டதாரி ஆசிரியர் விஜயலெட்சுமி மற்றும் விஜய்காந்தி தொகுத்து வழங்கினார்கள். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் முத்துவேல்ராஜன் மற்றும் பட்டதாரி ஆசிரியர் கோமதி செய்திருந்தார்.

English summary
Government conducts trade fair In Karaikudi. In that trade fair school students has participated and kept their inventions in the exhibition.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X