For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'தம்'மடித்து வீணாப் போகாதீங்க: துபாயில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாணவர்கள்

By Siva
Google Oneindia Tamil News

துபாய்: துபாயில் புகைபிடித்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியினை பள்ளி மாணவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

உலக புகையிலை எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 31-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி கிரீன் குளோப் என்ற மாணவர் அமைப்பினர் ஹுமைத் அபுபக்கர் தலைமையில் புகைபிடித்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.

School students create awareness about smoking in Dubai

இந்த நிகழ்ச்சி துபாயில் இருந்து அல் அய்ன் செல்லும் சாலையில் அமைந்துள்ள அவுட்லெட் வணிக வளாகத்தில் கடந்த 26-ஆம் தேதியில் இருந்து வரும் 31-ஆம் தேதி வரை தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை மேற்கொள்கிறார்கள்.

School students create awareness about smoking in Dubai

நிகழ்ச்சியில் புகையிலை உபயோகப்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்டவற்றை விளக்கி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இது குறித்து மாணவர் ஹுமைத் அபுபக்கர் கூறுகையில்,

School students create awareness about smoking in Dubai

புகையிலை பயன்படுத்துவதால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 லட்சம் பேர் இறக்கின்றனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இந்த பாதிப்புகளால் இறப்பவர்களின் எண்ணிக்கையினை குறைக்க உதவும் என்றார்.

School students create awareness about smoking in Dubai

மிகவும் இளம் வயதில் இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வரும் மாணவர்களை வணிக வளாக நிர்வாகத்தினரும், பொதுமக்களும் பாராட்டினர்.

English summary
School students are creating awareness among people about smoking in Dubai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X