For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெல்லையில் பள்ளி மாணவர்களிடையே பயங்கர மோதல்.. 9ஆம் வகுப்பு மாணவருக்கு கத்திக்குத்து

நெல்லையில் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 9 ஆம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    நெல்லையில் பள்ளி மாணவனுக்கு கத்திக்குத்து-வீடியோ

    நெல்லை: பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 9 ஆம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழகத்தில் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்டு வரும் மோதலை தடுப்பது குறித்து போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் கத்தியுடன் சண்டை போட்டுக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நெல்லை மாவட்டம் களக்காடு அரசு பள்ளியில் இன்று காலை 9 மணியளவில் வழக்கம் போல பள்ளி தொடங்கியதும் மாணவர்கள் வருகை இருந்தது. அப்போது குறிப்பிட்ட பிரிவு இரு பிரிவு மாணவர்கள் மத்தியில் முன் பகை காரணமாக மோதல் ஏற்பட்டது.

    வகுப்பு லீடர் புகார்

    வகுப்பு லீடர் புகார்

    இந்த மோதலில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரான்சிஸ் என்பவர் வகுப்பில் ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாக வகுப்பு லீடர் கண்ணன் வகுப்பு ஆசிரியரிடம் குறை கூறியுள்ளார். இது குறித்து கண்ணன் மீது பிரான்சிஸ்க்கு கோபம் உருவாகியுள்ளது.

    கண்ணனுக்கு கத்திக்குத்து

    கண்ணனுக்கு கத்திக்குத்து

    இதன்காரணமாக பகையோடு இன்று காலையில் பிரான்சிஸ் தான் வைத்து இருந்த கத்தியால் கண்ணனை குத்தியுள்ளார். இதில் அந்த மாணவனுக்கு காயம் ஏற்ப்பட்டு ரத்தம் கொட்டத் தொடங்கியது.

    மருத்துவமனையில் சேர்ப்பு

    மருத்துவமனையில் சேர்ப்பு

    இது குறித்து அங்கு திரண்டு நின்ற மாணவர்கள் பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்து உடனடியாக அவரை நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளித்தனர். பின்னர் நெல்லை பாளையம் கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

    கண்காணிக்க கோரிக்கை

    கண்காணிக்க கோரிக்கை

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது தேர்வுக்காலம் தொடங்கிவிட்டதால் பள்ளிகளில் உருவான முன்பகைகள் காரணமாக மாணவர்களுக்குள் மோதல்கள் உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளதால் தேர்வுக்காலம் மட்டுமின்றி பிற பள்ளி நாட்களிலும் காவல்துறையினர் பள்ளிகளை கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    கத்தி கலாச்சாரம்

    கத்தி கலாச்சாரம்

    கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்டு வந்த மோதல் மற்றும் கத்தியெடுக்கும் கலாச்சாராம் தற்போது பள்ளி மாணவர்களிடையேயும் பரவியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    School students fights with knife in Nellai Kalakkadu. In this incident a 9th standard student stabbed by other students.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X