For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசு பள்ளி கழிப்பறைகள் பரமாரிப்பு இனி மகளிர் குழுக்கள் கையில்- திருவள்ளூரில் முடிவு

Google Oneindia Tamil News

திருவள்ளூர்: திருவள்ளூரில் அரசு பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை பராமரிக்கும் பொறுப்பை மகளிர் குழுக்களிடம் ஒடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 1068 தொடக்கப்பள்ளி, 302 நடுநிலைப்பள்ளி, 162 உயர்நிலைப்பள்ளி, 146 மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 1,678 பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் வளாகங்களை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் உள்ள தூய்மை பணியாளர்கள் துப்புரவு செய்து வருகின்றனர்.

School toilet maintenance on the hands of Women group

ஆனால் பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளில் கழிப்பறைகளை சுத்தம் செய்ய துப்புறவுப் பணியாளர்களை அரசு நியமிக்கவில்லை. ஒரு சில உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் துப்புறவுப் பணிகளை மேற்கொள்ள பணியாளர்கள் இல்லை. அந்த இடங்கள் காலியாக உள்ளன. கிராம பகுதிகளில் இயங்கும் பள்ளிகளில் கழிப்பறைகளை துப்புறவு செய்யும் பணியாளர்களை மகளிர் குழுக்கள் மூலம் நியமிக்க மாவட்ட நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தநிலையில கிராம வறுமை ஒழுப்பு சங்கம், மகளிர் குழுக்களிடம் பள்ளி கழிப்பறைகளை பராமரிக்கும் பொறுப்பை ஒப்படைத்துள்ளது. முதற்கட்டமாக ஒன்றிய பொது நிதியில் இருந்து ஊதியத்தை கல்விக்குழு வங்கி கணக்கில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருக்கும் பொறுப்பு மகளிர் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறைகளை துப்புறவு செய்யும் பணியாளர்களை நியமித்து பணியில் ஈடுபடுத்த உள்ளனர்.

English summary
Tiruvalur schools decided to allot the toilets cleaning service in the hands of women groups.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X