For Quick Alerts
For Daily Alerts
Just In
ஏப்.23முதல் பள்ளிகளுக்கு 40 நாள் சம்மர் லீவ் ஜூன் 2-ல் மீண்டும் திறப்பு
சென்னை: ஏப்ரல் 23ம் தேதிமுதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வருடாந்திர தேர்வுகள் ஏப்ரல் 16-ம் தேதி முடிவடைகின்றன.
ஏப்ரல் 17, 18 ஆகிய இரு நாட்கள் (பெரிய வியாழன், புனித வெள்ளி) விடுமுறை ஆகும். அதன்பிறகு சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பின்னர் ஏப்ரல் 21, 22-ம் தேதிகளில் பள்ளிகள் இயங்கும்.
ஏப்ரல் 23-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டு ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரன் முருகன் தெரிவித்தார்.
Comments
English summary
TamilNadu government schools will close for summer holidays on April 23 and reopens on June 2.
Story first published: Friday, March 28, 2014, 15:35 [IST]