For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொகுதி பங்கீட்டில் அதிருப்தி.. திமுக கூட்டணியில் இருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ கட்சி!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: திமுக தலைமையிலான கூட்டணியில், சட்டப் பேரவைத் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த, எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில தலைவர் தலைமையில் 5 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டிருந்த நிலையில், கசப்பு காரணமாக, கூட்டணியில் இருந்து விலகுவதாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி அறிவித்துள்ளார்.

திமுக தலைமையிலான கூட்டணியில், சட்டப் பேரவைத் தொகுதி பங்கீடு குறித்து, திமுக தொகுதி பங்கீடு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி தலைமையில் 5 பேர் அடங்கிய குழுவை கட்சியின் மாநில செயலகக் குழு அமைத்திருந்தது.

SDPI won't continue in the DMK alliance

இந்தக் குழுவில், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் முகமது முபாரக், எஸ்.எம்.ரஃபீக் அகமது, மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது, மாநில செயலாளர் அமீர் ஹம்சா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் இணைந்திருந்தன. இக்கட்சிகளுடன் திமுக தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளது.

இன்று காலையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் தெகலான் பாகவி தலைமையில் தொகுதி பங்கீடு பற்றி ஆலோசனை நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் தெஹ்லான் பாகவி பேசினார். அப்போது அவர் கூறுகையில் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவின் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுடன் இன்று தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேசினோம். இதில் பேச்சுவார்த்தை முடியவில்லை என்றார்.

இந்நிலையில், தெகலான் பாகவி இன்று மாலை அளித்த பேட்டியில், "திமுக கூட்டணியில் இருந்து எஸ்.டி.பி.ஐ கட்சி வெளியேறுகிறது. எங்களுக்கான முக்கியத்துவத்தை திமுக அளிக்கவில்லை. அடுத்தகட்ட முடிவு பற்றி நாளை அறிவிக்க உள்ளோம்" இவ்வாறு தெகலான் பாகவி தெரிவித்தார்.

English summary
SDPI won't continue in the DMK alliance, says party state president K K S M Dhehlan Baqav.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X