For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக கேரள கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் ராட்சத அலைகள் எச்சரிக்கை!

Google Oneindia Tamil News

நாகை: தமிழக கேரள கடல் பகுதியில் இன்றும் நாளையும் ராட்சத அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் குளச்சல் முதல் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வரையிலான கிழக்கு கடற்கரை பகுதியில் இன்றும் நாளையும் ராட்சத அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Sea shores alerted by giant waves formation…

ஜூன் 1 ஆம் தேதி இரவு 11.30 மணி வரை இந்த பெருங்காற்றலை எச்சரிக்கை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 9 முதல் 16 அடி உயரம் வரை அலைகள் எழலாம் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தேசிய கடல் தகவல் சேவை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடை காலம் அமலில் இருந்ததால் மீனவர்கள் கடந்த ஒன்றரை மாத காலமாக மீன்பிடிக்க செல்லவில்லை. தற்போது மீன்பிடி தடை காலம் முடிவுக்கு வந்திருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தயாராகியுள்ளனர். குமரி மாவட்ட மீனவர்கள் ஜூன் 2 ஆம் தேதி முதல் கடலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

English summary
Tamil Nadu and Kerala sea shores alerted by Giant waves till june 1st night 11.30. Fishermen alerted for not going for fishing in the two days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X