For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆர்.கே.நகரில் இரவு நேர பிரச்சாரத்துக்கு கட்டுப்பாடு விதித்தது தேர்தல் ஆணையம்

ஆர்.கே.நகரில் இரவு நேர பிரச்சாரத்துக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: ஆர்.கே.நகரில் இரவு நேரங்களில் வீடுகளுக்கு சென்று பிரசாரம் செய்வதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால் பணப்பட்டுவாடா புகார் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தது. எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு வீதி வீதியாக ஆய்வு செய்யும் மைக்ரோ குழுவினரும் அமைக்கப்பட்டிருந்தனர்.

SEC bans night time propaganda in R.K.Nagar

அவர்களின் கண்களிலும் மண்ணை தூவிவிட்டு வேட்பாளர் ஒருவர் தரப்பிலிருந்து பணம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகருக்குடிசம்பர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

இந்நிலையில் இரவு நேரமான மாலை 5 மணி முதல் காலை 9 மணி வரை வீடு வீடாக பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. மேலும் தற்காலிக பூத் அமைக்கவும், வீதிகளில் கட்சியினர் அமரவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

கடந்த காலங்களில் இரவு நேரங்களில் பணம் கொடுத்ததாக எழுந்த புகாரை அடுத்து தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

English summary
State Election Commission bans the political parties to do propaganda for R.K.Nagar byelection 2017. It was taken for banning money distribution.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X