For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொடுமைடா சாமி... ஆட்டோ டிரைவருக்கு வாட்ச்மேன் ட்ரீட்மெண்ட்டா?

ஆட்டோ டிரைவருக்கு வாட்ச்மேன் சிகிச்சை அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆட்டோ டிரைவருக்கு வாட்ச்மேன் ட்ரீட்மெண்ட்-வீடியோ

    விழுப்புரம்: நாட்டில் நிறைய பிரச்சனைகள் வரக் காரணமே, அவங்கவங்க அவங்களுடைய வேலையை பார்ப்பதில்லை. அடுத்தவங்க விஷயத்தில் மூக்கை நுழைப்பது, அடுத்தவங்க வேலையை போய் பார்க்கப்போய்தான் சிக்கலே!! இங்கேயும் அப்படித்தான்!!

    கே.கே. ரோடு மணிநகரை சேர்ந்தவர் ஜீவா. 32 வயதான ஜீவா ஒரு ஆட்டோ டிரைவர். இவர் கடந்த திங்கட்கிழமை பைக்கில் சென்று கொண்டிருந்தபோது தெரியாமல் வண்டியில் இருந்த சைலன்சரில் கால் வைத்துவிட்டார். இதனால் ஜீவாவுக்கு காலில் தீக்காயம் பட்டுவிட்டது. இதனால் அவரை உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனார்கள்.

    [உத்தர பிரதேசத்தில் ரயில் தடம்புரண்டு விபத்து.. 5 பேர் பலி.. 30 பேர் படுகாயம்]

    கண்டு கொள்ளாத டாக்டர்

    கண்டு கொள்ளாத டாக்டர்

    அந்த நேரத்தில் டாக்டர்கள், நர்சுகள் என எல்லோருமே ஆஸ்பத்திரியில் இருந்தார்கள். ஆனாலும் காலில் தீக்காயத்துடன் அவதிப்பட்டு வந்த ஜீவா அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. அதற்கு பதிலாக அங்கே வாட்ச் மேன் கார்த்தி இருந்தார்.

    கட்டு போட்டார்

    கட்டு போட்டார்

    பாதுகாப்பு பணியில் இருந்த அவர் ஓடிவந்து, ஜீவாவை ஆஸ்பத்திரியில் இருந்த ஒரு ரூமுக்கு அழைத்து கொண்டு போனார். ஜீவாவுக்கு காலில் வழிந்துகொண்டிருந்த ரத்தத்தை பஞ்சு வைத்து துடைத்தார். தீக்காயத்துக்கு அவரே ஒரு மருந்தை எடுத்து காலில் அதை வைத்து கட்டு போட்டார். பின்னர் அவரே சில மருந்து, மாத்திரைகள் பெயரை கூறி வெளியில் மெடிக்கலில் வாங்கி சாப்பிடுமாறும் சொன்னார்.

    நோட்டீஸ்

    நோட்டீஸ்

    இதை அங்கிருந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் எல்லோருமே பார்த்து அதிர்ச்சியடைந்தனர். காலில் தீக்காயம் அடைந்தவருக்கு காவலாளி சிகிச்சை அளித்த காட்சி வாட்ஸ்-அப் மூலம் பரவியது. கூடவே அந்த வாட்ச் மேன் மீது ஆஸ்பத்திரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டன குரல்கள் பொதுமக்களிடமிருந்து குவிந்தன.

    வாட்ச்மேன் விளக்கம்

    வாட்ச்மேன் விளக்கம்

    இதைப்பற்றி கூறிய வாட்ச்மேன் கார்த்தி, "அன்னைக்கு ஆஸ்பத்திரியில கூட்டம் அதிகமாக இருந்தது. ஜீவா காலில் வழியும் ரத்தத்தை அங்கிருந்த ஒரு பெண் தன் புடவையால் துடைத்தார். இதை நான் பார்த்துவிட்டு, இப்படியெல்லாம் புடவையில் ரத்தத்தை துடைக்க கூடாது, செப்டிக் ஆகிவிடும், பஞ்சால்தான் துடைக்கணும் என்று சொன்னேன். ஆனால் ரத்தத்தை பார்த்த அந்த பெண் திடீரென மயக்கம் போட்டு விழுந்துவிட்டார். அதனால நானே பஞ்சு எடுத்து ஜீவாவுக்கு மருந்து வைத்தேன். ஒரு மனிதாபிமான அடிப்படையில்தான் இப்படி செய்தேன்" என்றார்.

    நடவடிக்கை எடுக்கப்படுமா?

    நடவடிக்கை எடுக்கப்படுமா?

    நோயாளிக்கு வாட்ச்மேன் சிகிச்சை பார்த்த புகாரில் விழுப்புரம் அரசு மருத்துவமனை டாக்டர், நர்சுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. டாக்டர்கள், நர்சுகள் பணியில் இருக்கும்போதே வாட்ச்மேன் ட்ரீட்மெண்ட் செய்தாரா? அல்லது அவர்களுக்கு தெரியாமல் நடந்ததா? இதற்கெல்லாம் அலட்சியம்தான் காரணமா? என்று சுகாதார பணிகள் இணை இயக்குநர் சார்பாக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவமனை உரிய விளக்கம் அளித்தபின்னர் சம்பந்தப்பட்ட டாக்டர், நர்ஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    English summary
    Security man treatment for Auto driver Jeeva in Villupuram
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X