For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இவரல்லவோ ஹீரோ.. எழுந்து நின்று சல்யூட் செய்யுங்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: 73 வயதான விவசாயி ஒருவர் சென்னை வெள்ள நிவாரணத்திற்கு ரூ. 50,000 நன்கொடையாக அளித்து அனைவரையும் நெகிழ வைத்துள்ளார்.

என்ன விஷயம் என்றால் இவருக்கே விவசாயம் பாதித்து, ரூ. 25,000 அளவுக்கு கடன் உள்ளது என்பதுதான்.

கர்நாடகத்தைச் சேர்ந்தவர் இந்த விவசாயி. இவரது பெயர் லட்சுமண் ருக்மன்னே கட்டாம்ப்ளே என்பதாகும். பெல்காம் மாவட்டம் கடோலி கிராமத்தைச் சேர்ந்தவர்.

See this humble farmer's huge mind

73 வயதான இவர் விவசாயி ஆவார். இவருக்கு விவசாயத்தில் பெரும் நஷ்டம், ரூ. 25,000 வரை கடனும் உள்ளது. இந்த நிலையில் சென்னை வெள்ள நிவாரணத்திற்காக ரூ. 50,000 நிதியுதவி அளித்துள்ளார் கட்டாம்ப்ளே.

ஏற்கனவே இவர் நேபாள நிலநடுக்க நிவாரண நிதிக்காக ரூ. 5000 கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோக, தனது கிராமத்தில் எஸ்எஸ்எல்சி படிப்பில் முதலிடம் பெறும் மாணவருக்கு வருடா வருடம் ரூ. 1500 கொடுத்தும் வருகிறார்.

ஹீரோக்கள் வரிசையில் நிச்சயம் இவருக்கு முதல் இடத்தைத் தரலாம்...!

English summary
This 73 year old farmer from Belgaum, Karnataka has made the people proud. He has donated Rs 50,000 to the Chennai flood relief despite he has Rs 25,000 loan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X