For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முருகனே தனி நாடு கேட்ட போராளிதானே... சீமான் "பகீர்" தகவல்!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் வசனம் ஒன்றே 'முருகன் தனிநாடு கேட்ட போராளி' என்பதற்கு ஆதாரம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இயக்குநராக இருந்த சீமான் திராவிடர் இயக்க மேடைகளில் பகுத்தறிவுக் கருத்துகளையும் ஈழ விடுதலை ஆதரவு கருத்துகளையும் பேசிவந்தார். 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 'திராவிட' எதிர்ப்பு அரசியலை முன்வைத்து 'நாம் தமிழர்' இயக்கத்தைத் தொடங்கினார்.

பின்னர் இதனை 'நாம் தமிழர்' அரசியல் கட்சியாக மாற்றினார். அண்மையில் நாம் தமிழர் கட்சியில் பிளவு ஏற்பட்டு. அய்யநாதன் தலைமையில் ஒருபிரிவினர் 'நாம் தமிழர்' என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பழனியில் பச்சை வேட்டி, துண்டு அணிந்து வேல் ஏந்தி, மனைவியுடன் காவடி எடுத்த சீமான், வீரத் தமிழர் முன்னணி என்ற பண்பாட்டு மீட்பு அமைப்பைத் தொடங்கினார். அதன் தொடக்க விழாவில் பேசிய சீமான், கடவுள் முருகன் எங்களது முப்பாட்டன்.. முப்பாட்டனை நாங்கள் வழிபடுகிறோம் என்றார். இது கடுமையான விமர்சங்களுக்கு வழிவகுத்திருக்கிறது.

இந்நிலையில் சிகப்புநாடா என்ற ஏட்டில் சீமான் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது:

கேள்வி: முருகன் போராளின்னு சொல்றதுக்கு என்ன ஆதாரம் வைச்சிருக்கீங்க?

பதில்: நீங்க திருவிளையாடல் படம் பாக்கலையா.. ஒரு மாங்கனிக்காக சூது பண்ணி பிள்ளையார் கவுத்த உடனே, 'எனக்கென்று ஒரு நாடு, எனக்கென்று ஒரு கொடி, என்நாடு, என் மக்கள்னு' சொல்லிட்டு முருகன் தனியா கிளம்பி வந்துரல...? என்ன தம்பி பேசறீங்க.. இதுக்கு மேல என்ன ஆதாரம் வேணும் சொல்லுங்க

கேள்வி: சரிங்க,, முருகனை தமிழ்க்கடவுள்னு ஒத்துக்கிட்டீங்க.. அவரோட அண்ணன் பிள்ளையார், அப்பா சிவன் எல்லோரையும் ஏத்துக்கனுமே

பதில்: ஆங்.. அங்கதான் இருக்கு ஆரிய சூழ்ச்சி. அவங்க அப்பா சிவன்கூட தமிழன்தான்.. தமிழ்ச்சங்கத்தோட தலைவனாக இருந்தவன் தான்.. ஆனா அந்த பிள்ளையார்தான் ஆரியர்கள் புகுத்திய இடைச்செருகல்...நாங்க தெளிவா இருக்கோம்ல... எங்களை யாரும் ஏமாத்த முடியாதுல்ல..

இப்படியான 'கலகலப்பாக' நீள்கிறது சீமானின் பேட்டி.

English summary
Naam Thamizhar leader Seeman defends his new stand on "God Murugan Worship" in the name of Tamil ancient leader.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X