For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

10,12-ம் வகுப்பிலும் தமிழில் படித்தால்தான் வேலைவாய்ப்பில் முன்னுரிமை- அரசுக்கு சீமான் பாராட்டு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்புகளிலும், பட்டப்படிப்பிலும் தமிழில் படித்தவர்களுக்கே தமிழகத்தின் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க வழிவகை செய்யும் வகையில் தமிழக அரசு சட்டமியற்றியிருப்பதை முழுமனதோடு வரவேற்கிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

பன்னெடுங்காலமாக தமிழர் நிலமெங்கும் கருத்தியல் பரப்புரையும், களப்பணியும் செய்து நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல தமிழ் அமைப்புகள் முன்வைத்த கோரிக்கை முழக்கம் இன்று செயலாக்கம் பெறுவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. சட்டமியற்றிய தமிழக அரசின் இச்செயல்பாட்டை மனதார பாராட்டுகிறேன்.

Seeman

உடனடியாக இந்த ஆண்டிலிருந்தே இச்சட்டத்தை நடைமுறை படுத்த வேண்டுமென்றும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இரண்டாம் பிரிவு பாடத்திட்டத்தில், தமிழ் மொழியில் கேட்கப்படும் கேள்வித்தாள் நீக்கப்பட்ட புதிய பாடத் திட்டத் தேர்வு முறையை திரும்பப் பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

English summary
Naam Tamilar Katchi Chief Co-ordinator Seeman has welcome that Tamil Nadu Govt's bill on Tamil-medium education since school must for preference in jobs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X